India

விவசாயிகளை ஒடுக்கும் போக்கைக் கண்டித்து குடியரசுத் தலைவர் உரையை புறக்கணிக்க திட்டம் - திருச்சி சிவா MP

விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் , விவசாயிகளை ஒடுக்கும் போக்கைக் கண்டித்தும் நாளை குடியரசுத் தலைவர் உரையை புறக்கணிக்க இருப்பதாக காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 16 கட்சிகள் முடிவு செய்திருப்பதாக திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா கூறியுள்ளார்.

இது தொடர்பாக பேட்டி அளித்த அவர் நாடாளுமன்றத்திலேயே இந்த சட்டங்களை நிறைவேற்ற கூடாது என்று எதிர்க்கட்சிகள் போராடினார்கள். ஆனால் அவற்றையெல்லாம் உதாசீனப்படுத்திவிட்டு விதிமுறைகளுக்கு மாறாக சட்டங்களை நிறைவேற்றினார்கள்.

தற்போது இரண்டு மாதங்களுக்கு மேலாக போராடி வரக்கூடிய விவசாயிகளை உணர்வுகளையும் புரிந்து கொள்ளாமல் அவர்களுக்கு எதிரான அடக்குமுறையை அரசு கட்டவிழ்த்து விட்டுள்ளது. இந்த போக்கு சரியல்ல. வரும் தகவல்கள் மோசமாக இருக்கின்றன. அரசுக்கு எதிராக போராடுபவர்கள் மீது உபா உள்ளிட்ட சட்டங்களின் கீழ் வழக்குப்போடுவது வாடிக்கையாகி வருகிறது. விவசாயிகள் தலைவர்கள் மீதும் அந்த சட்டப்படி வழக்குகள் தொடரப்பட்டுள்ளன என்றும் திருச்சி சிவா தெரிவித்தார்.

இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், மீனவர்கள் சுட்டு கொல்லப்பட்ட விவகாரம், புதிய கல்வி கொள்கை, கொரோனாவை அரசு கையாண்ட விதம் உள்ளிட்ட பல பிரச்சனை குறித்து தி.மு.க தரப்பில் பேசவுள்ளோம் எனக் கூறியுள்ளார்.

Also Read: “விவசாயிகளை தேசவிரோதிகளாக சித்தரிக்க முயல்வதை ஏற்கமாட்டோம்” - மம்தா பானர்ஜி காட்டம்!