India
விவசாயிகளை வன்முறையாளர்கள் என முத்திரை குத்தும் பாஜக.. அமித்ஷாவை பதவி நீக்கம் செய்ய காங்கிரஸ் கோரிக்கை!
டெல்லி செங்கோட்டை வன்முறையை தடுக்க தவறிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பிரதமர் மோடி பதவி நீக்கம் செய்ய வேண்டும். அவரைப் பதவி நீக்கம் செய்யாவிட்டால் உள்துறை அமைச்சரின் தோல்விக்கு பிரதமரும் பொறுப்பேற்க வேண்டிவரும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. நேற்று நடந்த வன்முறைகளுக்கு பின்னணியில் சதி நடந்திருப்பதாக காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது என்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ரந்தீப் சிங் சுர்ஜிவாலா கூறியுள்ளார்.
பாஜக ஆதரவாளரான தீப்சித்து தலைமையிலான 400 பேர் கொண்ட குழுவினர் நேற்று டெல்லி செங்கோட்டைக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்களை கைது செய்வதற்கு பதிலாக டெல்லி போலீசார் அவர்களை அங்கிருந்து தப்பிச்செல்ல அனுமதித்திருக்கிறார்கள். தற்போது விவசாய சங்கங்களின் தலைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இந்த செங்கோட்டை வன்முறை என்பது அரசின் பாதுகாப்பு குறைபாட்டையும், உளவுத்துறையின் தோல்வியையும்தான் காட்டுகிறது. அதற்குக் காரணமான அமித்ஷாவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். ஒரு வருடத்தில் இரண்டு முறை அமித்ஷா தலைமையிலான உள்துறை தோல்வி அடைந்திருக்கிறது. ஏற்கனவே டெல்லி கலவரத்தின் போதும், தற்போதும் உள்துறை தோல்வியடைந்துள்ளது.
கடந்த 70 ஆண்டுகளில் மிகவும் பலவீனமான ஒரு உள்துறை அமைச்சரை இந்தியா பெற்று இருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. 62 நாட்களாக விவசாயிகள் போராட்டம் அமைதியாக நடந்தது. அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு, தண்ணீரை பீச்சி அடித்து கலைக்க முயன்றனர். பின்னர் பதினோரு முறை பேச்சுவார்த்தை என்று இழுத்தடித்தார்கள். அதிலும் தோல்வி அடைந்தது பிறகு சங்கங்களை பிரிக்க முயற்சித்தார்கள். அதிலும் தோல்வியை சந்தித்தனர். தற்போது சதிசெய்து வன்முறையைத் தூண்டி, விவசாயிகள் வன்முறையாளர்கள் என்று முத்திரை குத்தி போராட்டத்தை ஒடுக்க அரசு முயற்சிப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
Also Read
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!