India
அத்துமீறும் சீனா : “பதிலடி தரப்போகிறீர்களா? கடந்தகால அரசு மீது பழி போடப் போகிறீர்களா?” - காங்கிரஸ் சாடல்!
அருணாச்சல பிரதேசத்தின் சர்ச்சைக்குரிய பகுதியில் சீனா சிறிய கிராமத்தைக் கட்டமைத்து வருவது குறித்து மத்திய பா.ஜ.க அரசு உரிய விளக்கம் அளிக்கவேண்டும் என காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேச எல்லையில், இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே பிரச்னை இருந்து வருகிறது. எல்லைகளை வரையறுப்பதில் இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாகச் சிக்கல் இருந்து வருகிறது.
இந்நிலையில் பா.ஜ.க எம்.பி தபிர் கவோ அளித்த பேட்டி ஒன்றில், “அருணாச்சலப் பிரதேசத்தின் எல்லையில் 100 வீடுகளைக் கொண்ட சிறிய கிராமத்தை சீனா கட்டமைத்து வருகிறது. இந்த கிராமத்தில் வணிக வளாகம், சாலைகள் கடந்த ஆண்டு முதல் அமைக்கப்பட்டு வருகின்றன” எனத் தெரிவித்தார்.
இதுதொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய எல்லைப் பகுதிகளை ஒட்டி சீனா கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விவகாரங்களை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ட்விட்டரில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். அதில், “பா.ஜ.க எம்.பி தபிர் கவோ, அருணாச்சல பிரதேசத்தில் சீனா 100 வீடுகளைக் கொண்ட கிராமத்தைக் கட்டமைத்து வருகிறது எனத் தெரிவித்துள்ளார். அந்தக் கிராமத்தில் வணிக வளாகமும், சாலையும் கடந்த ஆண்டு அமைக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இது உண்மையாக இருந்தால், சர்ச்சைக்குரிய பகுதியை மீறி, அங்கு நிரந்தரமாக சீன மக்களை சீன ராணுவம் குடியமர்த்த முயல்வது தெளிவாகிறது. இந்த அதிர்ச்சியளிக்கும் உண்மைகள் குறித்து மத்திய அரசு என்ன சொல்லப்போகிறது?
சீனாவுக்கு மற்றொரு நற்சான்று அளிக்கப்போகிறதா மத்திய அரசு அல்லது, குழப்பமான விளக்கத்தை அளித்து கடந்த கால அரசுகள் மீது பழி சுமத்தப்போகிறீர்களா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி, “இந்தியா சரியான பதிலடி தராவிட்டால் சீனா தமது அத்துமீறலை நிறுத்தாது. இந்தியா பலவீனமடைவதை சீனா பார்த்துக் கொண்டிருக்கிறது. உலக வரைபடத்தை மாற்ற சீனா விரும்புகிறது. ஆனால் இந்திய அரசுக்கோ உலகளாவிய பார்வை இல்லை. இந்த விவகாரத்தில் இந்தியாவை சீனா பலமுறை சோதித்துப் பார்த்துள்ளது. சீனாவுக்கு உரிய பதிலடி தராவிட்டால் அதன் அத்துமீறல்கள் தொடரும்” என எச்சரித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!