India
சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு பிறகும் நீடிக்கும் போராட்டம்.. வேளாண் கருப்பு சட்ட நகலை எரித்த விவசாயிகள்..!
உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகும் விவசாயிகள் போராட்டம் மாற்றமில்லாமல் தொடர்கிறது. இன்று வேளாண் சட்டங்களை எரித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. டெல்லியின் எல்லைகளில் விவசாயிகளின் போராட்டம் 49வது நாளை எட்டியுள்ளது.
போகிப் பண்டிகையை முன்னிட்டு அதிகாலை மூன்று மணிக்கு வேளாண் கருப்பு சட்டங்களையும் எரித்து போராட்டம் நடத்தப்போவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
டெல்லியில் போராட்டம் நடக்கக்கூடிய ஒவ்வொரு இடங்களிலும் சட்டங்களை எரித்து விவசாயிகள் போராட்டம் நடத்த இருப்பதாக கூறி உள்ளனர். அதேபோன்று பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல மாநிலங்களில் விவசாயிகள் தங்களுடைய கிராமங்களில் இந்த சட்டங்களை எரிக்கத் திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையே உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து இன்று விவசாய சங்கங்கள் தொடர் ஆலோசனைகளை நடத்த உள்ளனர்.
சட்டங்களை செயல்படுத்த உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து, கருத்துக் கேட்புக் குழு அமைத்துள்ள நிலையில் ஏற்கனவே அறிவித்துள்ள 15ஆம் தேதி பேச்சுவார்த்தையை நடத்துவதா அல்லது ரத்து செய்வதா என்பது தொடர்பாக மத்திய அரசும் இன்று ஆலோசனை நடத்துகிறது.
விவசாயிகள் அறிவித்துள்ள குடியரசு தின டிராக்டர் பேரணிக்கு தடைகோரி மத்திய அரசு தொடர்ந்துள்ள வழக்கு வேளாண் சட்ட வழக்கோடு இணைக்கப்பட்டு 18 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. அப்போது, தீர்ப்புக்குப் பின் எழுந்துள்ள சூழ்நிலை குறித்து உச்ச நீதிமன்றம் மீண்டும் ஆராய வாய்ப்புள்ளது.
இதனிடையே திருவள்ளூர் மாவட்டத்தில் போகி பண்டிகையை முன்னிட்டு வேளாண் சட்ட நகலை விவசாயிகள் பொதுமக்கள் தீயிட்டு எரித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
Also Read
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !
-
இந்தியாவின் சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: எஃகு வீரர் என India Today புகழாரம்!
-
கூடலூர் & ஆனைமலை புலிகள் காப்பகம் : ஆர்கிடேரியங்களை மேம்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு!
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !