India
வேளாண் சட்டங்களை இதுகாறும் நிறுத்திவைக்காதது ஏன்? - மோடி அரசை விளாசிய உச்சநீதிமன்றம்!
மத்திய மோடி அரசு கொண்டு வந்துள்ள விவசாய விரோத சட்டங்களான புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தி.மு.க எம்.பி. திருச்சி சிவா, ராஷ்ட்ரிய ஜனதா தளம் எம்.பி. மனோஜ் ஜா உள்ளிட்ட பலர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்குகள் இன்று தலைமை நீதிபதி பாப்டே, ராமசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தன. அப்போது, சட்டங்களை கொண்டு வருவதற்கு முன்பாக என்ன நடைமுறைகளை, ஆலோசனைகளை மத்திய அரசு நடத்தியது?
பல மாநிலங்கள் தற்போது இந்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கடந்த முறை வழக்கு விசாரணைக்கு வந்தபோது பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறினீர்கள். அதனுடைய முடிவு என்ன? இனியும் முடிவு எட்டப்படாத ஏன்? பேச்சுவார்த்தை முடியும் வரை இந்த சட்டங்களை நிறுத்தி வைக்காதது ஏன்?
பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாதது கவலை அளிக்கிறது. விவசாயிகள் போராட்டத்தை சுமூகமாக முடிக்க வேண்டும். ஏன் இன்னும் சட்டங்களை நிறுத்தி வைக்கவில்லை? எனக் கேள்வி எழுப்பினர்.
மேலும், சட்டங்கள் விவசாயிகளுக்கு நன்மை பயக்கக்கூடியதா இல்லையா என்கிற பிரச்சினைகள் நீதிமன்றம் செல்ல விரும்பவில்லை. அதனை பேச்சுவார்த்தை குழுவே முடிவு செய்யட்டும். சட்டங்களுக்கு இடைக்கால தடை விதித்தாலும் விவசாயிகள் தங்களுடைய போராட்டங்களை தொடர்வது குறித்து அவர்களே முடிவு செய்யலாம் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.
வேளாண் சட்டங்களுக்கு எதிரான அரசியல் சாசன பிரச்சனைகள் தொடர்பான வழக்கை இன்று விசாரிக்கப் போவதில்லை. அது பின்னர் விரிவாக விசாரிக்கப்படும் என்று கூறிய நீதிபதிகள், யார் டெல்லிக்கு வந்து போராடுவது என்பது குறித்து நீதிமன்றம் முடிவு செய்ய முடியாது. யாரை அனுமதிப்பது என்பதை போலிஸார் தான் முடிவு செய்ய வேண்டும். போராட்டம் காந்தி பாதையில் அமைதியாக நடைபெற வேண்டும் என்பதுதான் உச்சநீதிமன்றத்தின் விருப்பம் என்று நீதிபதிகள் கூறினர்.
சட்டங்களை அமல்படுத்துவதை நிறுத்திவைத்துவிட்டு ஒரு குழு அமைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கடந்த முறை கூறி இருந்தோம். அதற்கு மத்திய அரசு இதுவரை செவிசாய்க்கவில்லை. போராட்டத்தால் ஏதேனும் பெரும் அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால் யார் பொறுப்பு ஏற்பது?
சட்டங்களுக்கு தடை விதிப்பதற்கும், சட்டங்களை அமல்படுத்த தடை விதிப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. சட்டங்களை அமல்படுத்த தடை விதிக்கப்படும் எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், வேளாண் சட்டங்களை செயல்படுத்த இடைக்காலத் தடை விதித்து பேச்சுவார்த்தைக் குழு அமைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது. இதற்கு சட்டத்தை செயல்படுவதற்கு தடை விதிப்பது என்பது சட்டத்திற்கு தடை விதித்தது போன்றது. இதுவரை சுமார் 2 ஆயிரம் விவசாயிகள் புதிய சட்டங்களின் அடிப்படையில் ஒப்பந்தங்கள் செய்துள்ளனர் அவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் நீதிபதிகளிடம் வாதித்தார்.
ஏன் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது? நாங்கள் இவ்வளவு நேரம் வழக்கை பொறுமையாக கேட்டு இருக்கிறோம் எப்போது உத்தரவு பிறப்பிப்பது என்பது நீதிமன்றத்திற்கு தெரியும் என காட்டமாக நீதிபதிகள் கூறியுள்ளனர். இதனையடுத்து, எழுத்துப்பூர்வமான உத்தரவு எதுவும் பிறப்பிக்காமல் வழக்கு விசாரணை முடிந்தது. இன்று மாலை அல்லது, நாளை உத்தரவு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!