India
42வது நாளாக தொடரும் டெல்லி போராட்டம்: இதுவரை 78 பேர் பலி.. பெரு முதலாளிகளுக்கு சேவகம் செய்யும் மோடி அரசு!
மத்திய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், கடும் குளிரில் விவசாயிகள் டெல்லி எல்லைகளை முற்றுகையிட்டு கடந்த 42 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேளாண் சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய மோடி அரசு ஏற்க மறுத்ததால் 7ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்துள்ளது. இருப்பினும் சட்டங்களை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்று விவசாயிகள் உறுதியாக வலியுறுத்தியுள்ளனர். அதற்கு குறைந்த எந்த சமரசத்தையும் ஏற்கமுடியாது என்று தொடர்ந்து திண்ணமாக இருந்து போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
இப்படி இருக்கையில், கடுமையான குளிர், காற்று மாசுபாட்டால் உடல்நிலை பாதிக்கப்பட்டு வருவதால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அவ்வகையில், டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த குர்ஜந்த் சிங் என்ற 63 வயது விவசாயி உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நேற்று இரவு உயிரிழந்திருக்கிறார்.
இதனைத்தொடர்ந்து உயிரிழப்பு 78 ஆக உயர்ந்திருப்பதாக பாரத கிசான் சங்க பொதுச் செயலாளர் ஜக்மோகன் சிங் தெரிவித்துள்ளார். கடந்த 42 நாள் போராட்டத்தில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 65 விவசாயிகளும், ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த 10 விவசாயிகளும், உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து இரண்டு பேரும் மத்திய பிரதேசத்தில் இருந்து ஒருவரும் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
ஆயிரக்கணக்கான விவசாயிகள் கடுமையான குளிரிலும் போராடி வருகின்றனர். ஆனால் பிரதமர் மோடியும் அவரது அமைச்சரவை சகாக்களும் கார்ப்பரேட் முதலாளிகளை காப்பதற்கு மறுபுறம் போராடி வருவது பாஜக அரசின் மீது பெரும் அதிருப்தியையே ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!