India
ஷாகீன்பாக்கில் துப்பாக்கிச்சூடு நடத்தியவரை கட்சியில் இணைத்து 2 மணிநேரத்தில் நீக்கிய பா.ஜ.க!
மோடி அரசு கடந்தாண்டு நிறைவேற்றிய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடுமுழுவதும் கடும் போராட்டம் நடைபெற்றது. அதன் ஒருபகுதியாக டெல்லி ஷாகீன்பாக் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் மூன்று மாதங்களுக்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
அதேபோல் டெல்லியில் நடைபெற்ற ஜாமியா பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் மற்றும் புறநகர் பகுதியில் நடைபெற்ற சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தை மோடி அரசு காவல்துறை - துணைராணுவம் கொண்டு கலைத்தது.
அமைதியான முறையில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறையை ஏற்படுத்தும் நோக்கில், இந்துத்வா கும்பல் பல வகைகளில் முயற்சித்தது. அதில் ஷாகீன்பாக் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தின்போது கபில் பைஸ்லா என்ற கபில் குர்ஜார் என்பவர் போராட்டம் நடைபெற்ற இடத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
கடந்த பிப்ரவரி 1ம் தேதி குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடியவர்களை அச்சுறுத்தும் விதமாக வானத்தை நோக்கி இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டு மக்களை அச்சுறுத்தினார் கபில் குர்ஜார்.
அப்போது அங்கிருந்தவர்கள் கபில் குர்ஜாரை பிடித்து பாதுகாப்பு பணியில் இருந்த போலிஸாரிடம் ஒப்படைத்தனர். போலிஸார் கைது செய்து அழைத்துச் சென்றபோது, குஜ்ஜார் "ஜெய் ஸ்ரீ ராம்" என்று கூச்சலிட்டார்.
பின்னர் போலிஸார் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் ஜாமீனில் வெளிவந்த கபில் குர்ஜார் தற்போது பா.ஜ.கவில் இணைந்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ளா காஜியாபாத்தில் உள்ளூர் பா.ஜ.க தலைவர்கள் முன்னிலையில், கபில் குர்ஜார் அதிகாரப்பூர்வமாக பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்துள்ளார். வட மாநிலங்களில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடுவர்களை கட்சியில் இணைத்து வருவதாக கூறி, “ரவுடிகளின் கட்சி பா.ஜ.க” என பலரும் ட்விட்டரில் விமர்சித்து வந்தனர்.
கடுமையான எதிர்ப்பையடுத்து இரண்டு மணி நேரத்தில் கபில் குர்ஜாரின் உறுப்பினர் சேர்க்கையை ரத்து செய்துள்ளது பா.ஜ.க.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!