India
“தேவையற்றதைப் பேசினால் குறிப்பிட்டுச் சொல்ல எம்.பிக்கு உரிமை இல்லையா?” - சபாநாகயருக்கு ராகுல் கடிதம்!
பாதுகாப்புத் துறைக்கான நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் தன்னைப் பேச அனுமதிக்காதது குறித்து மக்களவை சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளார் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி.
பாதுகாப்புத் துறைக்கான நாடாளுமன்றக் குழுக் கூட்டம் பா.ஜ.க எம்.பி ஜூவல் ஓரம் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முப்படை வீரர்களின் சீருடைகளை மாற்றுவது குறித்து ஆலோசனை தொடங்கியது.
அப்போது எழுந்த காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, தேசப் பாதுகாப்பு, இராணுவத்தை எவ்வாறு பலப்படுத்துவது ஆகியவை குறித்துப் பேசாமல் சீருடை குறித்துப் பேசுவது நேரத்தை வீணடிக்கும் செயல் எனத் தெரிவித்தார்.
இதையடுத்து ராகுல் காந்தி தொடர்ந்து பேச அனுமதி மறுக்கப்பட்டது. இதைக் கண்டித்து காங்கிரஸ் எம்.பி.க்கள் ராகுல் காந்தி, ராஜீவ் சத்சவ், ரேவந்த் ரெட்டி ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.
இதுதொடர்பாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் சுதந்திரமாகப் பேசுவதை மக்களவைத் தலைவர் உறுதி செய்ய வேண்டும்.
நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் நான் பேச முற்பட்டபோது, குழுத் தலைவர் ஜூவல் ஓரம் அனுமதிக்கவில்லை. சீன ராணுவத்தின் அத்துமீறல், லடாக் எல்லை நிலவரத்தை அறிய நான் பேச எழுந்தபோது எனக்கு அனுமதியளிக்கவில்லை.
குழுவின் செயல்பாடு நோக்கத்தை விட்டு விலகிச் செல்லும்போது அதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது உறுப்பினரின் உரிமை. ஓர் உறுப்பினர் அதிருப்தி தெரிவித்தாலும் அதை ஏற்க வேண்டும். ஆனால், என்னைப் பேசக்கூட அனுமதிக்கவில்லை.
அவையின் பாதுகாவலரான மக்களவை சபாநாயகர், இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் உறுப்பினர்கள் பேச வகை செய்து குழுவின் நோக்கத்தை உறுதிப்படுத்த வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
Also Read
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !
-
இந்தியாவின் சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: எஃகு வீரர் என India Today புகழாரம்!
-
கூடலூர் & ஆனைமலை புலிகள் காப்பகம் : ஆர்கிடேரியங்களை மேம்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு!
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!