India

“கொரோனா ஊரடங்கு மற்றும் வேலையிழப்பால் காலியான குடும்பங்களின் சேமிப்பு” : மோடி ஆட்சியில் நிகழும் அவலம்!

நாட்டின் பொருளாதாரத்துக்கு எவ்வளவு நெருக்கடிகள் வந்தாலும் மக்களுக்கு இருக்கும் சேமிப்பு பழக்கத்தின் மூலம் நெருக்கடிகளில் இருந்து எப்பாடுபட்டாவது மீண்டு வருவார்கள். ஆனால் மோடி அரசின் தனது தவறான பொருளாதாரக் கொள்கையால், மக்களிடம் இருந்த சிறு சேமிப்பு முற்றிலுமாகச் சிதைத்துவிட்டது.

குறிப்பாக கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சேமிப்புக்கான வட்டிவிகிதமும் பெரும் சரிவைச் சந்தித்துள்ளதாகக் கூறப்பட்டுகிறது. இந்நிலையில், கொரோனா ஊரடங்கு பாதிப்பால் ஏற்பட்ட வேலையிழப்பு மற்றும் சம்பள குறைவு போன்ற நடவடிக்கைக் காரணமாக குடும்பங்களில் சேமிக்கும் அளவு அதிகமாக குறைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது இந்தியாவின் சாமானிய குடும்பங்கள் தங்களின் வருவாயில் சுமார் 60 சதவிகிதத்தை சேமிக்கும் பழக்கம் கொண்டவர்கள் என்றும், ஆனால் தற்போது அந்த எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே இந்தியாவின் ஜி.டி.பி-யில் மொத்த சேமிப்பின் அளவு கடந்த 2012ம் ஆண்டில் கூட 34.6 சதவிகிதமாக சேமிப்பு இருந்தது. ஆனால், 2019-ம் ஆண்டில் இதன் அளவு 30.1 சதவிகிதமாகக் குறைந்துள்ளது என மத்திய புள்ளியியல் அமைப்பு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தற்போது வேலையிழப்பு அல்லது சம்பள குறைப்பு காரணமாக நுகர்வோர் செலவழிப்பு கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு பெருமளவு குறைந்துள்ளதாக நுகர்வோர் சார்ந்த கணக்கீட்டு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக, பண்டிகைக் காலத்தில் நுகர்வோர் செலவிடும் அளவு குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், சுமார் 8,240 பேரிடம் நடத்தப்பட்ட கருத்துக் கேட்பில், 68 சதவீதம் பேர் கடந்த 8 மாதங்களில் தங்களது சேமிப்பு வெகுவாகக் குறைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

மேலும், இதில், அடுத்த 4 மாதங்களில் மேற்கொள்ள உள்ள செலவு மற்றும் மார்ச் 2021-ல் சேமிப்பு எந்த அளவுக்கு இருக்கும் என்றும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், 10 சதவீதம் பேர்தான் அடுத்த 4 மாதங்களில் மிகவும் அத்தியாவசிய செலவுகளை செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

மக்களின் சேமிப்பு குறைவதன் மூலம், மத்திய அரசு வெளிநாட்டு வங்கி மற்றும் முதலீட்டாளர்களிடம் இருந்து வாங்கும் கடனின் அளவு அதிகரிக்கும் எனவும் பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: மோடி அரசின் மூர்க்கத்தனம் எல்லைகளை கடந்துவிட்டது; பிடிவாதத்தை விட்டு சட்டத்தை வாபஸ் பெறுக - ராகுல் காந்தி