India

“கோவாக்சின் தடுப்பூசியால் பக்க விளைவுகள் எதுவும் இல்லை” : முதல்கட்ட சோதனை முடிவு குறித்து ICMR தகவல்!

இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா தடுப்பு மருந்துகள் தயாரிக்கும் பணியில் உலக நாடுகள் மும்பரமாக ஈடுபட்டு வரும் வேலையில், 2022ம் ஆண்டுதான் கொரோனா தடுப்பூசி இயல்பாக கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டுகிறது.

இந்நிலையில் இந்தியாவில் பாரத் பயோடெக் மற்றும் ஐ.சி.எம்.ஆர் தயாரிக்கப்படும் கோவாக்சின் தடுப்பூசியின் முதல் கட்ட சோதனை நிறைவு பெற்று முடிவுகள் வெளியாகிவுள்ளது. இதுதொடர்பாக பாரத் பயோடெக் மற்றும் ஐ.சி.எம்.ஆர் சார்பில் வெளியிட்டப்பட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் கண்டறியப்பட்ட கோவாக்சின் தடுப்பூசியின் முதல்கட்ட சோதனை முடிவில், தடுப்பு மருந்து பாதுகாப்பாகவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமல்லாது, பக்கவிளைவுகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் இந்த தடுப்பூசி 2 மற்றும் 8 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் வைக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கோவாக்சின் தடுப்பூசியின் 3ம் கட்ட மனித உடலில் செலுத்தும் மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் இதில் சுமார் 26,000 பங்கேற்றிருப்பதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது.

Also Read: “2022ம் ஆண்டில்தான் கொரோனா தடுப்பூசி இயல்பாக கிடைக்கும்” : எய்ம்ஸ் இயக்குனர் ரந்தீப் குலேரியா பேச்சு!