India

"மசாலா பொருட்களில் கழுதை சாணம், ஆபத்தான அமிலங்கள் கலப்படம்" - சிக்கிய இந்துத்வ அமைப்பு பொறுப்பாளர்!

உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் நவிபூர் பகுதியில் உள்ள மசாலா பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை போலிஸார் சோதனையிட்ட போது மனிதர்கள் சாப்பிடக்கூடாத பல பொருட்கள் மசாலா பொருட்களுடன் கலந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

சோதனையின்போது மசாலா பொருட்களில் கழுதைச் சாணம், வைக்கோல், உண்ணத்தகாத வண்ணக் கலவைகள், ஆபத்தான அமிலங்கள் போன்றவை கலந்திருப்பதை உறுதி செய்தனர்.

மேலும், மசாலா தொழிற்சாலையை நடத்தி வரும் இடத்தில் அதை நடத்துவதற்கான உரிமம் பெறப்படவில்லை என்றும் அங்கு தயாரிக்கப்பட்டிருந்த பிராண்டுகளின் பெயர்களும் போலியானவை எனத் தெரியவந்துள்ளது.

இந்த தொழிற்சாலையின் உரிமையாளர் அனூப் வர்ஷ்னி கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இந்து யுவா வாஹினி அமைப்பின் பொறுப்பாளராகச் செயல்பட்டு வருகிறார். இந்த அமைப்பு உத்தர பிரதேசத்தின் தற்போதைய முதல்வர் யோகி ஆதித்யநாத்தால் 2002ம் ஆண்டு நிறுவப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்துத்வ அமைப்பைச் சேர்ந்தவர், சக மனிதர்கள் உண்ணும் உணவுப் பொருட்களில் உண்ணத்தகாத கழிவுகளையும், ஆபத்தான இரசாயனங்களையும் கலந்துள்ள செயல் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “பாசிசத்தை கையாண்டு கருத்துசுதந்திரத்தை பறிக்கும் இந்துத்வ அமைப்புகள்”-Godman குழு பகிரங்க குற்றச்சாட்டு!