India

டெல்லியில் 18-வது நாளாக போராட்டம் : சுங்கச்சாவடிகளை கைப்பற்றி வாகனங்களை இலவசமாக அனுப்பி விவசாயிகள்!

மத்திய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், டெல்லி எல்லையில் கடந்த 18 நாட்களாக தொடர்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், வேளாண் சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்காததால், 5ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததுள்ளது.

அதேவேளையில், விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று மத்திய அரசு வற்புறுத்தி வருகிறது. ஆனால் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற முடியாது என்றும் முரண்டு பிடித்து வருகிறது. தங்களின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்காததால் விவசாயிகள் போராட்டத்தை மேலும் தீவிரமாக்கியுள்ளனர்.

குறிப்பாக, பல்வேறு வகை போராட்டங்களை படிப்படியாக நடத்துவப்போவதாக அறிவித்துள்ளனர். அதன்படி நேற்றைய தினம் நேற்று மற்றும் இன்று நாட்டிலுள்ள அனைத்து சுங்கச்சாவடிகளையும் முடக்கப்படும் என்றும் டெல்லி-ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையை முடக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் அறிவித்தது போல், ஹரியாணாவில் உள்ள முக்கிய சுங்கச்சாவடிகளை விவசாயிகள் முற்றுகையிட்டனர். அங்குள்ள அம்பாலா, ஹிஸார் நெடுஞ்சாலை, பஸ்தாரா மற்றும் பியோந்த் பகுதிகளில் உள்ள நெடுஞ்சாலைகளை முற்றுகையிட்டுள்ள விவசாயிகள், வாகன ஓட்டிகளிடம் இருந்து பணம் வசூலிக்கப்படுவதை தடுத்து நிறுத்தினர்.

அதேப்போல், சுங்கச்சாவடியில் சுங்கம் வசூலிக்கும் கவுண்டர்கள் பூட்டப்பட்டுள்ளன. இதனால் அவ்வழியாக அனைத்து வாகனங்களும் இலவசமாக பயணித்து வருகின்றன. இந்நிலையில், நாளை ரயில் மறியல் மற்றும் டெல்லியை நோக்கி வரும் சாலைகளை மறித்து போராட்டங்களை முன்னெடுக்க விவசாயிகள் தீர்மானித்துள்ளனர்.

இந்தப் போராட்டம் காரணமாக அரசுக்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே, டெல்லி எல்லைகளில் 100 கம்பனி மத்திய படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே போராட்டக்களத்தை நோக்கி அணி அணியாக, இந்திய ராணுவ படைகள் செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

Also Read: “விவசாயிகள் போராட்டத்தின் இரண்டாவது அத்தியாயம்”: பஞ்சாப்பில் இருந்து படைகளோடு கிளம்பிய 1500 ட்ராக்டர்கள்!