India
“பா.ஜ.க அலுவலகங்கள் முற்றுகை, அம்பானி நிறுவனங்கள் புறக்கணிப்பு”- போராட்டத்தை தீவிரப்படுத்தும் விவசாயிகள்!
விவசாயிகளுக்கும் மத்திய பா.ஜ.க அரசுக்கும் இடையே இதுவரை நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்துள்ள நிலையில், போராட்டத்தை தீவிரப்படுத்த விவசாயிகள் முடிவெடுத்துள்ளனர்.
பா.ஜ.க அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடும் விவசாயிகளின் போராட்டம் இரண்டு வாரங்களாகத் தொடர்ந்து வருகிறது. போராடும் விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே இதுவரை நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்துள்ளன.
வேளாண் சட்டங்களை திரும்பப் பெறவேண்டும் எனும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்க மத்திய அரசு மறுத்து வருவதால் விவசாயிகள் போராட்டம் தொடரும் என திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து அரசு தரப்பில், சட்டங்களில் திருத்தம் செய்வதாக தெரிவிக்கப்பட்டது.
இதை முழுமையாக ஏற்க மறுத்த விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தேசிய அளவில் தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளனர். படிப்படியாக பல்வேறு வகை போராட்டங்களை அறிவித்துள்ளனர்.
அதன்படி, டிசம்பர் 12ம் தேதி நாட்டிலுள்ள அனைத்து சுங்கச்சாவடிகளையும் முடக்கப்படும் என்றும் டெல்லி-ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையை முடக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 14ம் தேதி டெல்லி, பஞ்சாப், ஹரியானா, மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் மாவட்டத் தலைநகர்களில் வேலை நிறுத்தம், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்கள். பிற மாநில விவசாயிகள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டங்களில் ஈடுபடுவார்கள்.
பஞ்சாபில் இழுத்து மூடியதைப் போல், நாடு முழுவதிலும் உள்ள ரிலையன்ஸ் மற்றும் ஜியோ நிறுவனங்களின் ஷாப்பிங் மால்களுக்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெறும். ரிலையன்ஸ் ஜியோ சிம்மை புறக்கணிக்கும் போராட்டம் நடைபெறும்.
மேலும், நாடு முழுவதிலுமுள்ள பா.ஜ.க அலுவலகங்களை முற்றுகையிட்டு அரசுக்கு எதிரான முழக்கங்கள் எழுப்பப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!