India
கடும் குளிரிலும் 11வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்: திட்டமிட்டபடி டிச.,8ல் நாடுதழுவிய போராட்டம்!
மோடி அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டம் 11வது நாளை எட்டியுள்ளது.
டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் விவசாயிகள் போராட்டம் நடத்துவதற்கு அரசு அனுமதி மறுத்ததால், டெல்லி புறநகர் பகுதியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து, நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தைகளில் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்காமல் மத்திய மோடி அரசு பிடிவாதமாக இருந்து வருகிறது.
தங்களுடைய எதிர்காலமும் இந்திய மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக கோரிக்கைகளை அரசு ஏற்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் என கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் போராடி வருகின்றனர்.
ஹரியானா, உ.பி எல்லைகளில் நெடுஞ்சாலைகளை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் அடுத்த கட்ட திட்டம் குறித்து இன்று பிற்பகல் விவசாய சங்க கூட்டமைப்பு ஆலோசனை நடத்தவுள்ளது. 9 ஆம் தேதி மத்திய அரசு நான்காம் கட்ட பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இதனிடையே, டிசம்பர் 8ஆம் தேதி நாடுதழுவிய வேலை நிறுத்த போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று விவசாய சங்கங்கள் கூறியுள்ளன. பல்வேறு அரசியல் கட்சிகளும் விவசாயிகளின் போராட்டத்துக்கு தங்களது ஆதரவினைத் தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
இந்தியாவின் சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: எஃகு வீரர் என India Today புகழாரம்!
-
கூடலூர் & ஆனைமலை புலிகள் காப்பகம் : ஆர்கிடேரியங்களை மேம்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு!
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!
-
”தொழில் தொடங்க தமிழ்நாட்டிற்கு வாருங்கள்” : மலேசியா தமிழ்ச் சங்கத்தில் பேரவைத் தலைவர் அப்பாவு பேச்சு!