India
படேல் சிலை டிக்கெட் வசூலில் ரூ.5.24 கோடி மோசடி : சிலை நிர்வாகம் - வங்கி - ஏஜென்சியின் கூட்டுசதியா?
குஜராத்தில் படேல் சிலைக்கான பார்வையாளர் கட்டணத் தொகையை வங்கியில் செலுத்தாமல் ரூ.5 கோடியே 24 லட்சம் முறைகேடு செய்யப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பா.ஜ.க அரசால் குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டம் கேவடியா பகுதியில் சர்தார் வல்லபாய் படேலுக்கு உலகிலேயே மிக உயரமான சிலை அமைக்கப்பட்டது. இது ஒற்றுமையின் சிலை எனவும் பெயரிடப்பட்டது.
குஜராத்தின் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கும் இங்கு பார்வையாளர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் கட்டணம், வதோதராவில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் டெபாசிட் செய்யப்படுகிறது.
இந்த டெபாசிட் தொகையை வசூல் செய்யும் பொறுப்பு தனியார் ஏஜென்சி ஒன்றிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த ஏஜென்சி ஊழியர்களில் சிலர் ரூ.5 கோடியே 24 லட்சத்தை வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்யாமல் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 2018 நவம்பர் முதல் 2020 மார்ச் வரை பார்வையாளர் கட்டண வசூல் தொகைக்கும் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்ட தொகைக்கும் இடையே பெரும் தொகை வேறுபாடு இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, ஏஜென்சி ஊழியர்கள் மீது வங்கி மேலாளர் போலிஸில் புகார் செய்தார். போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
இதற்கிடையே, மோசடி செய்யப்பட்ட ரூ.5 கோடியே 24 லட்சத்தை வங்கியே தங்களது கணக்கில் செலுத்திவிட்டதாக சிலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால், சிலை நிர்வாகத்திற்கும், வங்கிக்கும் இந்த மோசடியில் தொடர்பு இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
Also Read
-
”மதச்சார்பின்மைக்கும் கிடைத்துள்ள மகத்தான வெற்றி” : ஹேமந்த் சோரனுக்கு வாழ்த்து சொன்ன CM MK Stalin!
-
”இது உங்களின் வெற்றி” : வயநாடு மக்களுக்கு நன்றி சொன்ன பிரியங்கா காந்தி!
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டை கைப்பற்றும் இந்தியா கூட்டணி !
-
பெண்களுக்காக Pink Auto திட்டம் : விண்ணப்பிக்க காலம் நீட்டிப்பு... விண்ணப்பிப்பது எப்படி ? - முழு விவரம் !
-
ஜார்க்கண்ட் தேர்தல் முடிவு : சொல்லி அடித்த இந்தியா கூட்டணி - கடும் பின்னடைவில் பா.ஜ.க!