India
“கடுங்குளிரிலும் அனல் பறக்கும் விவசாயிகளின் 8வது நாள் போராட்டம்”: டெல்லியில் படைகளை குவிக்கும் மோடி அரசு!
மோடி அரசின் வேளாண் விரோத கொள்கைகளை எதிர்த்து உத்தரப்பிரதேசம், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் 7வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லி எல்லையான ஷிங்கு, திக்ரி, ஹாசிபூர், நோய்டா பகுதிகளில் விவசாயிகள் தொடர்ந்து இரவு பகலாக சாலைகளில் போராட்டங்களத் தொடர்ந்துவருகிறார்கள். இதனால் டெல்லிக்கு வரும் பெரும்பாலான சாலைகள் மூடப்பட்டுள்ளன.
டெல்லி போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து மேலும் பல மாநிலங்களில் போராட்ட அறிவிப்பை விவசாய அமைப்புகள் வெளியிட்டுள்ளன. இந்நிலையில் விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்துள்ளதால் எல்லைகளில் போலிஸாரும், துணை ராணுவத்தினரும் படை படையாக குவிக்கப்பட்டு வருகின்றனர். இதனிடையே இன்று மீண்டும் பேச்சு வார்த்தை நடைபெறுகிறது.
மத்திய அரசின் தரப்பில் ஐந்து உறுப்பினர் கொண்ட குழுவை அமைப்பதாகவும் அது விவசாயிகள் சங்கம் தெரிவித்திடும் ஆட்சேபணைகளை ஆய்வு செய்து அறிக்கை அளித்திடும் என்றும் அளித்திட்ட முன்மொழிவை விவசாய சங்கத் தலைவர்கள் நிராகரித்தனர்.
அனைத்து சட்டங்கள் குறித்தும் ஆட்சேபணைகளை அளித்திடுமாறு மத்திய அரசு, சங்கத் தலைவர்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறது. அமைச்சர் கூறும்போது, வேளாண் சட்டங்களில் குறைபாடுகள் இருக்கலாம் என்றும், அவற்றைப் பரிசீலித்திட அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
பின்னர், விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு, தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும்வரை விவசாயிகள் போராட்டங்கள் தீவிரப்படுத்தப்படும் என்று அறிவித்தது. இக்கடுங்குளிரிலும் விவசாயிகள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். எனவே மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என அனைத்து அரசியல் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!