India
வேளாண் சட்டத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு: அர்ஜுனா, பத்ம விருதுகளை திருப்பியளிக்க பஞ்சாப் வீரர்கள் முடிவு!
வேளாண் சட்டங்களை திரும்பப் பெறவில்லை என்றால் டெல்லியின் அனைத்து எல்லைகளையும் முற்றுகையிட்டு போராட்டத்தை தீவிரப்படுத்தப் போவதாக விவசாயிகள் அறிவிப்பு.
நேற்று நடத்திய பேச்சுவார்த்தையில் மத்திய அரசு முன்வைத்த பேச்சுவார்த்தை குழு கோரிக்கையை விவசாய சங்கங்கள் முற்றிலுமாக நிராகரித்துள்ளன. இதனிடையே நாளை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு அழைத்துள்ளது. இது தொடர்பாக விவசாய சங்க கூட்டமைப்பினர் இன்று கூடி ஆலோசனை நடத்தினர்.
நாளைய பேச்சுவார்த்தையில் வேளாண் சட்டங்களை முழுமையாக திரும்பப் பெற மத்திய அரசு முன்வரவில்லை என்றால் டெல்லியின் அனைத்து எல்லைகளையும் முற்றுகையிட்டு போராட்டத்தை தீவிரப்படுத்தப் போவதாக விவசாய சங்க கூட்டமைப்பு முடிவு செய்திருக்கிறது.
இதனிடையே பஞ்சாபைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் 3 பேர் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அர்ஜூனா மற்றும் பத்மஸ்ரீ விருதுகளை திரும்ப வழங்குவதாக அறிவித்துள்ளனர்.
பத்மஸ்ரீ விருது பெற்ற மல்யுத்த வீரர் கத்தார் சிங், ஒலிம்பிக் தங்கப் பதக்கம் பெற்ற ஹாக்கி வீரர் அர்ஜுனா விருது பெற்ற குருமெயில் சிங், முன்னாள் ஹாக்கி கேப்டன் ராஜ்பீர் கவுர், அர்ஜுனா விருது பெற்ற கூடைப்பந்து வீரர் சஷன் சிங் ஆகியோர் விருதுகளை திரும்பப் தரப்போவதாக அறிவித்துள்ளனர்.
இவர்களுடன் சேர்ந்து மேலும் பல விளையாட்டு வீரர்கள் விருதுகளை திரும்ப வழங்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Also Read
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !
-
இந்தியாவின் சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: எஃகு வீரர் என India Today புகழாரம்!
-
கூடலூர் & ஆனைமலை புலிகள் காப்பகம் : ஆர்கிடேரியங்களை மேம்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு!
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!