India
“வெளிநாடு வாழ் இந்தியர்கள் தபால் மூலம் வாக்களிக்க அனுமதி?” : குளறுபடிகளில் ஈடுபட துடிக்கும் மோடி அரசு!
தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தல்களில் வெளிநாடுவாழ் இந்தியர்கள் தபால் மூலம் வாக்களிக்கும் முறையை அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. இதற்கான விதிமுறைகள் விரைவில் வெளியிடப்பட உள்ளது.
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்களிக்கும் அனுமதிப்பது தொடர்பாக 2015 ஆம் ஆண்டு அனைத்து கட்சிகளிடமும் சட்ட ஆணையம் ஆலோசனை நடத்தியது. ஆனால், தபால் வாக்கு முறைக்கு அனைத்து கட்சிகளுமே எதிர்ப்பு தெரிவித்திருந்தன.
பா.ஜ.க மட்டும் கருத்து எதனையும் வெளியிடவில்லை. இதனைத் தொடர்ந்து வெளி நாட்டில் வாழக்கூடிய ஒருவருடைய வாக்குகளை அவர் நியமிக்கும் ஒருவர் சொந்த ஊரில் வாக்களிக்கலாம் என்கிற நடைமுறையை கொண்டு வர முடிவு அரசு முடிவு செய்து.
அதற்காக 2018 ஆம் ஆண்டு மத்திய அரசு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திக் திருத்தத்தை கொண்டு வந்திருந்தது. அந்த சட்ட திருத்தம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டாலும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்படவில்லை. இதனால் அந்த சட்டம் செயலிழந்து.
இதற்கிடையே தான் தற்போது, வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு தபால் மூலம் வாக்களிக்கும் முறையை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நடைமுறையானது சாத்தியமானதுதான் என்று மத்திய சட்ட ஆணையம் சட்டத்துறைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த தபால் வாக்கு முறை செயல்படுத்தக் கூடியது என்று சட்ட ஆணையம் கருத்து தெரிவித்ததால் வரும் 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக இதனை செயல்படுத்துவது தொடர்பான அரசாணையை மத்திய அரசு வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகம், கேரளா, பஞ்சாப், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சுமார் ஒரு கோடி பேர் இந்தியாவுக்கு வெளியே வசிக்கிறார்கள். இவர்களில் சுமார் 60 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி உடையவர்கள். இவர்களுடைய வாக்குகளை குறிவைத்து தற்போது மத்திய அரசு இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
மக்களின்ன் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் கொண்டுவரமால், அரசாணை மூலம் இதனை செயல்படுத்த மத்திய சட்டத்துறை தயாராகிவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக, “80 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும், சலுகை அளிப்பது போன்று “தபால் வாக்களிக்கும்” முறையை அறிமுகப்படுத்திய இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில், வெளிநாடு வாழ் இந்தியர்கள் தபால்மூலம் வாக்களிக்க அனுமதி வழங்க மோடி அரசு முடிவு எடுத்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதன்மூலம் மோடி அரசு குளறுபடிகளில் ஈடுபட நினைப்பதாக அரசியல் கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : வயநாட்டில் 27,000 வாக்குகளில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?