India

“கடைசி இடத்தில் இருக்கும் நீங்கள் எங்களுக்கு பாடம் அருகதை இல்லை” : யோகி ஆதித்யநாத்துக்கு KCR பதிலடி!

தெலங்கானாவின் ஐதராபாத்தில் வருகிற டிசம்பர் 1ம் தேதி மாநகராட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக அரசியல் கட்சித் தலைவர்கள் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். அதில், ஆளும் கட்சியாக உள்ள முதலமைச்சர் சந்திரசேகர ராவின் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சிக்கும் பாஜகவுக்கும் கடுமையான போட்டி நிலவுகிறது.

அண்மையில் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்ற பாஜக ஆளும் உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் மகாராஷ்டிர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரான தேவேந்திர பட்னாவிஸும் பங்கேற்று பரப்புரை மேற்கொண்டனர்.

அப்போது பேசிய யோகி ஆதித்யநாத், புதிய நிஜாம்கள் வசம் ஜதராபாத் மாநகரம் உள்ளது. இதற்கு விரைவில் ஒரு முடிவுகட்டியாக வேண்டும் என வழக்கம் போல் பாஜகவுக்கே உரிய பாணியில் சர்ச்சையை கிளப்பும் வகையில் பேசியிருக்கிறார். இதற்கு அம்மாநில முதலமைச்சரும் டி.ஆர்.எஸ். கட்சியின் தலைவருமான சந்திரசேகர ராவ் பதிலடி கொடுத்துள்ளார்.

அதில், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு தனி நபர் வருமானத்தில் 13ம் இடத்தில் இருந்த நமது தெலங்கானா மாநிலம் தற்போது 5ம் இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. ஆனால், 28ம் இடத்தில் உள்ள உத்தர பிரதேசத்தின் மாநில முதலமைச்சர் யோகி நமக்கு பாடம் நடத்த வேண்டிய அவசியம் இல்லை.

மேலும், கலவரத்தையும் தூண்டி ஐதராபாத் மற்றும் மாநிலத்தின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசும் அவர்களது சதிகளுக்கு ஆமோதிக்கப் போகிறோமா அல்லது அதனை முறியடிக்க போகிறோமா என மக்களை நோக்கி சந்திர சேகர ராவ் கேள்வி எழுப்பிய அவர், தயவு கூர்ந்து சிந்தித்து முடிவெடுங்கள் எனக் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், பிளவுவாத கட்சிகளிடம் இருந்து ஐதராபாத்தையும் மாநிலத்தை காப்பதற்கு ஒன்றிணையுங்கள் என வேண்டுகோள் விடுத்த சந்திரசேகர ராவ், ஒரு மாநகராட்சி தேர்தலுக்கு அனைத்து பாஜக தலைவர்களும் பரப்புரை மேற்கொள்வது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார்.

Also Read: “நிர்வாகத் திறனற்ற முதல்வர் யோகி ஆதித்யநாத்தை கோரக்நாத் மடத்திற்கே அனுப்ப வேண்டும்”: மாயாவதி ஆவேசம்!