India

“வங்கிகளின் வாராக்கடன் அளவு 11% அதிகரிக்கும்” : மோடி அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் ரேட்டிங்ஸ் நிறுவனம்!

இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் கொரோனா பாதிப்பை விட, இந்திய பொருளாதாரம் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. முன்னதாகவே கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்த இந்தியா, கொரோனா ஊரடங்கால் மேலும் பலத்த அடிவாங்கியுள்ளது.

இதன்காரணமாக இந்திய வங்கிகளில் வாராக்கடன் உயர்ந்து, வங்கியின் மூலதனம் காலியாகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அதாவது, கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பால் இந்தியாவில் வாராக்கடன் அளவு உயர்ந்துள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் அடுத்து 12 முதல் 18 மாதங்களில் இந்திய வங்கிகளின் நிகர வாராக் கடன் அளவு 11 சதவிகிதம் வரையில் அதிகரிக்கும் என எஸ்.பி குளோபல் ரேட்டிங்ஸ் நிறுவனம் எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக எஸ்.பி குளோபல் ரேட்டிங்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனாவுக்கு முன்பு மோசமான நிதிநிலையிலும், அதிக வாராக்கடனிலும் இருந்த வங்கிகள் இனிவரும் காலகட்டத்திலும் அதிகளவிலான பிரச்னைகளை எதிர்கொள்ளப் போகிறது.

மேலும் இந்த மோசமான வங்கிகள் வாயிலாகவே அடுத்த 12 முதல் 18 மாதத்தில் இந்திய வங்கிகளின் நிகர வாராக்கடன் அளவு 11 சதவிகிதம் வரையில் அதிகரிக்கும்” எனத் தெரிவித்துள்ளது.

Also Read: பா.ஜ.க அரசின் முத்ரா கடன் திட்டம் படுதோல்வி? ; வாராக் கடன் அதிகரிப்பு : ஆர்.பி.ஐ துணை கவர்னர் கவலை!