India
“மோடி அரசின் தடுப்பு நடவடிக்கையால் தொற்று குறைந்ததாக பா.ஜ.கவினர் பொய் பிரச்சாரம்”: கொரோனா நிலவரம் என்ன?
கொரோனா வைரஸ் தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக உலக நாடுகளைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வருகிறது கொரோனா பெருந்தொற்று. வைரஸுக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் உலக நாடுகள் திணறி வருகின்றன.
இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதிதாக 46,232 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. இதனையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 90,50,598 ஆக உயர்ந்திருக்கிறது.
ஒரே நாளில் 564 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததை அடுத்து 1,32,726 பேர் இந்தியாவில் கொரோனாவுக்கு பலியாகியிருக்கிறார்கள். மேலும், ஒரே நாளில் 49,715 பேர் குணமடைந்திருக்கிறார்கள். இதனால் குணமடைதோர் எண்ணிக்கை 84,78,124 ஆக ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து, 4,39,747 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அதேவேளையில், குணமடைந்தோர் விகிதம் 93.67% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.47% ஆக குறைந்துள்ளது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 4.86% ஆக குறைந்துள்ளது.
இந்நிலையில் நாள்தோறும் கொரோனா தொற்று அதிகரிக்கின்ற சூழலில், மோடி அரசின் தடுப்பு நடவடிக்கை காரணமாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதாக பா.ஜ.கவினர் பொய் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த ஒருவாரத்தில் மட்டும் இந்தியாவில் 1.30 லட்சம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகிறது. இதனிடையே புள்ளிவிவரங்களைக் கொண்டு பா.ஜ.கவின் பொய் பிரச்சாரங்களை, சமூக வலைதளங்களில் பலரும் அம்பலப்படுத்தி வருகின்றனர்.
Also Read
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு