India

4ல் ஒருவருக்கு கொரோனா; ஒரே நாளில் 8,593 பேருக்கு வைரஸ் தொற்று.. டெல்லியில் இதுவரை இல்லாத உச்சம்..!

டெல்லியில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 8 ஆயிரத்து 593 பேருக்கு வைரஸ் தொற்றுக்கு ஆளாகியும், 85 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

இதுவரை 4 லட்சத்து 60 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 42 ஆயிரம் பேர் தற்போதும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். டெல்லியில் காற்று மாசு மற்றும் குளிர் காரணமாக கொரோனா பாதிப்பு மூன்றாவது அலையின் போது தொடர்ந்து நீடித்து வருகிறது.

இம்மாதம் இறுதியில் தினசரி பாதிப்பு 12 ஆயிரமாக உயரும் என்று கணிக்கப்பட்டிருப்பதால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு அதிக படுக்கைகளை ஒதுக்க வேண்டும் என்று முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே புதிதாக நடத்தப்பட்ட சமூக பரவல் ஆய்வில் டெல்லியில் 25.5 சதவீதம் பேருக்கு கொரோனா வந்து சென்றிருப்பது தெரியவந்துள்ளது. அதாவது நான்கு பேரில் ஒருவருக்கு கோரான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் டெல்லி மக்கள் வாழ்வாதாரத்துக்கும் கொரோனாவுக்கும் இடையே போராடி வருகின்றனர்.

Also Read: பண்டிகை காலங்களில் தமிழகத்தில் வெகுவாக அதிகரிக்கும் கொரோனா பரவல்? : கொரோனா பாதிப்பு நிலவரம் ! #COVID19