India

“பா.ஜ.க அரசின் நடவடிக்கைகள் எண்ணற்ற குடும்பங்களை அழித்தொழித்துவிட்டன” - ராகுல் காந்தி சாடல்!

பா.ஜ.க அரசு கொண்டுவந்த ஊரடங்கு, பண மதிப்பிழப்பு நடவடிக்கைகளால் நாட்டில் கணக்கிடமுடியாத குடும்பங்கள் அழிந்துவிட்டதாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

மோடி அரசு கொண்டுவந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் நான்காவது ஆண்டு நிறைவு நாளான நேற்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பா.ஜ.க அரசையும், பிரதமர் மோடியையும் கடுமையாகச் சாடியிருந்தார். கொரோனா வைரஸைத் தடுக்க கொண்டுவரப்பட்ட ஊரடங்கால் பொருளாதாரம் வீழ்ந்து, வங்கதேசத்தைவிடச் சரிந்துவிட்டது எனக் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்நிலையில் தெலங்கானாவில் 19 வயது கல்லூரி மாணவி ஊரடங்கு காரணமாக, உதவித்தொகை மறுக்கப்பட்டதால் குடும்பத்தில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடியால் தற்கொலை செய்து கொண்ட செய்தியைப் பகிர்ந்து மோடி அரசை விளாசியுள்ளார் ராகுல் காந்தி.

தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஐஸ்வர்யா, டெல்லியில் உள்ள லேடி ஸ்ரீராம் கல்லூரியில் உதவித்தொகையுடன் படித்துவந்தார். ஐ.ஏ.எஸ் கனவுடன் தயாராகி வந்தவரை ஊரடங்கும், பா.ஜ.க அரசின் உதவித்தொகை மறுப்பும் சேர்ந்து பலிகொண்டுள்ளது.

இந்தச் செய்தியை ட்விட்டரில் பகிர்ந்த ராகுல் காந்தி, “உள்நோக்கத்தோடு பா.ஜ.க அரசு கொண்டுவந்த பண மதிப்பிழப்பு, ஊரடங்கு நடவடிக்கைகள் கணக்கிடமுடியாத குடும்பங்களை அழித்துவிட்டன” என விமர்சித்துள்ளார்.

Also Read: “மோடி அரசால் நிறுத்திவைக்கப்பட்ட கல்வி உதவித்தொகை” : ரோகித் வெமுலாவை தொடர்ந்து மாணவி ஐஸ்வர்யா தற்கொலை!