முதல்வர் பினராயி விஜயன்
India

பழங்குடி - பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்த 19 பேரை பகுதிநேர அர்ச்சகர்களாக நியமிக்க கேரள அரசு பரிந்துரை !

அனைத்து கோவில்களிலும் ஆகம விதிகளின் படி, படித்து சான்று பெற்று அனைத்து சாதியினரும் அர்ச்சகர்களாக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழகம் மற்றும் கேரளாவில் நீண்ட காலமாகவே இருந்து வருகிறது.

இந்நிலையில், கேரளாவில் இடதுசாரி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, முதன் முதலாக தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர், திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியத்தின் கீழ் செயல்படும் கோவிலில் அர்ச்சராக நியமனம் செய்யப்பட்டார். அதன்பின்னர் தொடர்ச்சியாக பிற்படுத்தப்பட்டோர் வகுப்பைச் சார்ந்த 133 பேரும், பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்த 18 பேரும் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன்மூலம் பல்வேறு சமூக மக்களிடமும் பாராட்டுக்களை பெற்று வந்த கேரள அரசு, இந்த முறை திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியத்தில் பகுதிநேர அர்ச்சகர்களாக பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்த 18 பேரும், பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒருவரும் நியமிக்க பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக கேரள தேவச வாரியத்தின் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் வெளியிட்டுள்ள தகவலில், “திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியத்தின் ஆளுகைக்குட்பட்ட கோவில்களில், பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒருவர் மற்றும் பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்த 18 பேர் என மொத்தம் 19 பேரை பகுதி நேர அர்ச்சகர்களாக்க நியமிக்கத் திருவாங்கூர் தேவஸ்வம் வாடியம் முடிவு செய்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

நாட்டிலேயே பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒருவர் அரச்சராக நியமிக்கப்பட்ட உள்ளது முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “கொரோனா பேரிடர் காலத்தில் நீண்ட நாளாக பணிக்கு வராத 385 அரசு மருத்துவர்கள் பணிநீக்கம்” : கேரள அரசு அதிரடி!