India
இந்தியாவில் பண்டிகை காலங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு - சுகாதாரத்துறை எச்சரிக்கை!
இந்தியாவில் வரவிருக்கும் பண்டிகை காலங்களில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடிய வாய்ப்புள்ளதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்து வருகிறது.
இந்தநிலையில் பொதுமக்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கூறியதாவது:
சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் மற்றும் முகக் கவசம் அணிவது, கைகளை ஒழுங்காகக் கழுவுவது ஆகியவை முக்கியத்துவம் வாய்ந்தது.
தற்போதுள்ள சூழலில் கேரளா, கர்நாடகம், மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா மற்றும் டெல்லி ஆகிய 5 மாநிலங்களில் பண்டிகை காலங்களில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ளதாக எங்களுக்குத் தெரிய வந்துள்ளது.
அதனால் கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றுவது என்பது மிக முக்கியமானதாகும்.
இந்தநிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை சத்தீஸ்கர், கர்நாடகம், மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா மற்றும் டெல்லி ஆகிய 5 மாநிலங்களில் 58% என்ற அளவில் உள்ளது.
இதேபோல், கேரளா (4,287), கர்நாடகம் (3,130), மேற்கு வங்காளம் (4,121), மகாராஷ்டிரா (3,645) மற்றும் டெல்லி (2,832) ஆகிய 5 மாநிலங்களில் 49.4% கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!