India
ஹத்ராஸில் மீண்டும் 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை : உ.பி-யில் தொடரும் பாலியல் குற்றங்கள்!
மோடி ஆட்சியில் நாடுமுழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில், பா.ஜ.க ஆட்சி செய்யும் உத்தர பிரதேச மாநிலத்தில் சிறுபான்மையினர், தலித் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் வெகுவாக அதிகரித்துள்ளன.
உ.பி-யில் ஏராளமான குற்ற நிகழ்வுகள் நடந்துள்ளது சமீபத்தில் வெளியான செய்திகள் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குறிப்பாக, பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் வன்கொடுமை தாக்குதல்களின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. கடந்த வாரம் மட்டும் 18 பாலியல் வல்லுறவு சம்பவங்கள் நடந்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறிப்பாகம் உத்தர பிரதேசத்தில் ஹத்ராஸில் 19 வயதான தலித் பெண் கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். அந்த சம்பவத்தைத் தொடர்ந்து அதே மாநிலத்தில் பல்ராம்பூர் மாவட்டத்தில் 22 வயது தலித் பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொன்றுள்ளனர்.
இதேப்போன்று ஜியான்பூர் பகுதியில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த நபரால் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில், உத்தர பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிராகப் பெருகி வரும் குற்றங்களை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த வாரத்தில் 23 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், தற்போது 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் ஹத்ராஸில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியைச் சேர்ந்த 4 வயதான சிறுமிக்கு அதேப்பகுதியைச் சேர்ந்த 9 வயது மற்றும் 12 வயதுடைய சிறார்கள் இரண்டு பேர் பாலியல் வன்கொடுமை செய்தாக சிறுமியின் பெற்றோர் ஹத்ராஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரைப் பெற்றுக்கொண்ட போலிஸார், இரண்டு சிறார்களையும் போலிஸார் கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பு வைத்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவதாக போலிஸார் தெரிவித்துள்ளனர். சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !