India
“நீட், ஆதார் என மோடி கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தும் மோசடியே..” - தோல்வியை ஒப்புக்கொண்ட அரசு!
பாஜக தலைமையிலான அரசு மத்தியில் ஆட்சியமைத்த நாள் முதல் நாட்டு மக்களுக்கு சாதகமான நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்கு பதிலாக அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட் பெரு நிறுவனங்களை வளர்ப்பதற்கான திட்டங்களே செயல்படுத்தப்பட்டு வருகிறது என தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகிறது.
ஏற்கெனவே கருப்பு பணத்தை ஒழிக்கிறேன் எனக் கூறிக்கொண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டதில் ஏழை எளிய மக்களும் சிறு, குறு வணிகர்களுமே வெகுவாக பாதிக்கப்பட்டனர். அந்த பாதிப்பு இன்றளவும் தணியாமல் உள்ளது. அதுப்போன்று ஜிஎஸ்டி கட்டாயம், ஆதார் கட்டாயம் நீட் கட்டாயம் என பலவற்றை தொடர்ந்து கட்டாயப்படுத்தி வருகிறது மோடி அரசு.
அவ்வகையில், ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைக்கும் வகையில், மருத்துவ படிப்பில் சேர்வதற்கு நீட்-ஐ கொண்டு வந்த மோடி அரசு, அதனை ஒருங்கே நிர்வகிக்கத் தெரியாமல் வழக்கம் போல் கோட்டை விட்டுக்கொண்டிருக்கிறது. கடந்த மாதம் நடந்த நீட் தேர்வுக்கான முடிவுகள் நேற்று முன் தினம் வெளியிடப்பட்டன.
அதில், தேர்ச்சி பெற்றவர்களின் விகிதம் மற்றும் எண்ணிக்கையில் மிகப் பெரிய குளறுபடி உள்ளது அம்பலமானது. திரிபுராவில் 3,536 பேர் தேர்வு எழுதிய நிலையில் 88,889 பேர் தேர்ச்சி பெற்றதாகவும், உத்தரகாண்டில் தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை 12,047 ஆக இருக்கும் போது தேர்ச்சி பெற்றவர்கள் 37,307 ஆகவும் அறிவிக்கப்பட்டது.
அதேபோல, தெலங்கானாவில் 7,323 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றதில் 60.79% என குறிப்பிடப்பட்டிருந்தது. இதுப்போன்று பல்வேறு குளறுபடிகள் நிறைந்த நீட் தேர்வு ஒரு தோல்வியடைந்த திட்டம் என்பதற்கு தேசிய தேர்வு முகமையின் செயல்பாடுகள் உதாரணமாக அமைந்திருக்கிறது.
அதேபோன்று, கடந்த ஆண்டு நீட் தேர்வுக்கு ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ படிப்பில் சேர்ந்த விவகாரத்தில் 10 பேரின் ஆதார் அட்டையில் இருந்த புகைப்படத்தை ஆதாரமாகக் கொண்டு அவர்களை அடையாளம் கண்டுபிடித்து தரவேண்டும் என சிபிசிஐடி போலிஸார் தரப்பில் ஆதார் ஆணையத்தில் கேட்கப்பட்டிருக்கிறது.
இதற்கு ஆதார் ஆணையத்திடம் இருந்து கொடுக்கப்பட்ட பதில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. என்னவெனில், ஆதார் அட்டையில் உள்ள புகைப்படங்களை கொண்டு கண்டுபிடிப்பது முடியாத காரியம் எனக் கூறி ஆதார் ஆணையம் கைவிரித்திருக்கிறது.
நாட்டு மக்கள் அனைவருக்கும் ஆதார் அட்டையே முழுமையான அடையாள அட்டை என்றும் மக்களின் பாதுகாப்புக்கான அரணாக ஆதார் செயல்படும் என மேடைக்கு மேடைக்கு அறிவித்துவிட்டு ஆதார் ஆணையமே இவ்வாறு கூறியிருப்பது மோடி அரசு செயல்படுத்தும் ஒவ்வொரு திட்டங்களும் மக்களுக்கு எந்த வகையிலும் பயன்களை கொடுக்கப்போவதில்லை என்பதையே தொடர்ந்து உணர்த்தி வருவதற்கு மேற்குறிப்பிட்டுள்ள சம்பவங்களுமே சாட்சியாக உள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!