India
மருத்துவரின் முகக் கவசத்தை பிடுங்கும் பிறந்த குழந்தை : வைரலாகும் புகைப்படம் ! #Symbol_Of_Hope
ஒரு பிறந்த குழந்தையின் புகைப்படம் ஒன்றில் அந்த குழந்தை மருத்துவரின் முககவசத்தை பிடுங்குவது போல் உள்ளது, அந்த புகைப்படம் தற்போது உள்ள கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுச்சூழலில் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.
நடப்பு ஆண்டின் தொடக்கத்திலிருந்து ஆரம்பித்த கொரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுவதிலும் மக்கள் வாழ்வியல் முறைக்கு பழகிக் கொண்டுள்ளனர், அதாவது தற்போது உள்ள சூழலை உலக மக்கள் “New normal world” என்று குறிப்பிடுகிறார்கள்.
என்னவென்றால், நோய்த்தொற்று அபாயத்தைக் குறைக்க வெளியே செல்லும் போது பல நாடுகள் முகக் கவசங்களைக் கட்டாயமாக்கியுள்ளன. பெரும்பாலான மக்கள் விதிமுறைகளுக்கு இணங்க, முகக் கவசங்களை அணிந்தாலும், இந்த புதிய முகம் சில சமயங்களில் மக்கள் மத்தியில் கோபத்தை உண்டாக்குகிறது என்பதே பெரும்பாலானவர்களின் கருத்து.
இந்த கொரோனா தொற்று காலத்திற்கு முன்பாக முகக் கவச உடைகளை மருத்துவர்கள் தான் அணிந்திருப்பார்கள். பொதுமக்களுக்கு வெளியே செல்லும் போது கூட அதைப் பற்றி எந்த ஒரு பாதிப்பும் இல்லாத சூழல் தான் இருந்தது.
அப்படிப்பட்ட நிலையில் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளள குழந்தை புகைப்படம் தற்போது உள்ள உலக நிலவரத்திற்குக் கச்சிதமாக பொருந்துவது அனைவருக்கும் ஆச்சர்யத்தை அளிக்கிறது.
இந்த படத்தை ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் டாக்டர் சமர் செயிப் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில் புதிதாகப் பிறந்த குழந்தை தனது மருத்துவரின் முகக்கவசத்தைச் கையில் சுற்றிக் கொண்டு, அவரது முகத்தில் இருந்த முகக் கவசத்தை இழுத்து, அந்த மருத்துவரின் புன்னகையை உலகிற்கு வெளிப்படுத்துகிறது.
"நாங்கள் அனைவரும் விரைவில் முககவசத்தை கழற்றப் போகிறோம் என்பதற்கான நம்பிக்கை தான் இந்த புகைப்படம்," என்று பதிவிட்டுள்ளார் டாக்டர் சமர்.
தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
முகக்கவசம் இல்லாத உலகத்தை காண நாமும் தானே ஆவலுடன் உள்ளோம்!.
Also Read
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!