India

NTA இணையதளம் முடக்கம் : நீட் தேர்வு முடிவுகளை பார்க்க முடியாமல் மாணவர்கள் அவதி!

மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் கடந்த செப்டம்பர் 13-ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை தமிழகத்தில் சுமார் ஒரு லட்சம் பேர் உட்பட நாடு முழுவதும் 14 லட்சத்து 37 ஆயிரம் பேர் எழுதினர்.

கொரோனா தொற்றுக்கு ஆளான மாணவர்கள் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்ததால் தேர்வு எழுத முடியாமல் போன மாணவர்களுக்கு நேற்று முன்தினம் மறு தேர்வு நடத்தப்பட்டது.

இதையடுத்து, நீட் தேர்வு இறுதி விடைகள் இன்று வெளியிடப்பட்டன. நீட் தேர்வு முடிவுகள் சற்றுமுன்பு இணையத்தில் வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகளை www.ntaneet.ac.in என்ற இணையத்தில் தெரிந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.

தேர்வு முடிவுகளை பார்க்க ஒரே நேரத்தில் மிக அதிக எண்ணிக்கையிலானோர் குவிந்ததால் தொழில்நுட்பச் சிக்கல் காரணமாக தேசிய தேர்வு முகமை இணையதளம் முடங்கியுள்ளது. இதனால் மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Also Read: “நீட் தேர்வு விவகாரத்தில் துரோகம் செய்தது யார்..? இதோ ஆதாரங்கள்” - பழனிசாமியை விளாசும் மு.க.ஸ்டாலின்!