India
“தொழில் துறை உற்பத்தியில் 8% வீழ்ச்சி” : பொருளாதாரம் கவலைக்கிடமாக இருப்பதை ஒப்புக்கொண்ட மோடி அரசு !
இந்தியாவில் கொரோனா பாதிப்பால் நாளுக்கு நாள் தொற்று எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், நாடுமுழுவதும் ஊரடங்கால் இந்தியாவின் பொருளாதாரமும் படு மோசமான நிலையை எட்டியுள்ளது.
குறிப்பாக, நாடு முழுவதும் உள்ள நிலக்கரி, எண்ணெய், கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருட்கள், உருக்கு, சிமெண்ட், மின்சாரம் ஆகிய எட்டு தொழில் துறைகளின் உற்பத்தி கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.
இந்த பொருளாதார பிரச்னைகளைத் தீர்க்க மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பல்வேறு அரசியல் கட்சியினர் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், தொழில்துறை உற்பத்தி கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 8 சதவீதம் சரிந்துள்ளதாக, மத்திய அரசு புள்ளி விவரம் மூலம் தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பாக, மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகம் திங்களன்று, 2020 ஆகஸ்ட் மாதத்திற் கான தொழில்துறை உற்பத்திமதிப்பீடுகளை வெளியிட்டது.
அதில், சுரங்கம், உற்பத்தி, மின்சாரம், உள்கட்டமைப்பு, கட்டுமானம் உள்ளிட்ட தொழிற் துறைகளின் உற்பத்தி, தொடர்ந்து 6-ஆவது மாதமாக சரிவைக் கண்டுள்ளது.
குறிப்பாக, 2020 ஆகஸ்டில் 8.0 சதவிகிதம் அளவிற்கு வீழ்ச்சி கண்டுள்ளது. 2019 ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும் போது, 2020 ஆகஸ்டில் சுரங்கத் தொழில் உற்பத்தி 9.8 சதவிகிதம், தயாரிப்பு தொழில்கள் 8.6 சதவிகிதம், மின்சாரத் தொழில்துறை உற்பத்தி 1.8 சதவிகிதம், அத்தியாவசிய பொருட்கள் தொழில் துறை 11.1 சதவிகிதம், மூலதனப் பொருட்கள் உற்பத்தி 15.4 சதவிகிதம், நடுத்தர பொருட்கள் உற்பத்தி 6.8 சதவிகிதம் உள்கட்டமைப்பு மற் றும் கட்டுமானத் தொழில் 2.3 சதவிகிதம் என வீழ்ச்சி கண்டுள்ளன.
அதேப்போல், நுகர்வோர் சில்லரை விலைப் பணவீக்கம்(Consumer Price Index - CPI) கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவுக்கு, 2020 செப்டம்பரில் 7.34 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. நுகர்வோர் உணவு விலைப் பணவீக்கமும்(Consumer Food Price Index), கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவிற்கு 2020 ஆகஸ்ட் மாதத்தில் 6.69 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
Also Read
-
’சமத்துவம் மலரட்டும்' : பள்ளி பெயர் பலகையில் இருந்த ‘அரிசன் காலனி’ என்பதை அழித்த அமைச்சர் அன்பில் மகேஸ்!
-
”மழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
ரூ.80 கோடி : 12,100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”உ.பி மக்களுக்கு நீதி வழங்க வேண்டும்” : துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிரியங்கா காந்தி கண்டனம்!
-
தமிழ்நாடு சட்டப்பேரவை டிசம்பர் 9ஆம் நாள் கூடுகிறது! : சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!