India
டிராக்டரில் குஷன் சீட்டை விமர்சிப்பவர்கள் மோடியின் சொகுசு விமானத்தைக் கண்டுகொள்ளாதது ஏன்?- ராகுல் கேள்வி!
பாட்டியாலாவில் செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கூறியதாவது, "பிரதமர் நரேந்திர மோடி ஏன் ரூபாய் 8,000 கோடிக்கு விமானங்களை வாங்கினார் என்று கேள்வி கேட்க ஏன் யாரும் வரவில்லை? அந்த விமானத்தில் குஷன்கள் இல்லை ஆனால் ”50 மெத்தைகள்” உள்ளது என்று கூறினார். “எதற்கு இத்தகைய விமானத்தை 8 ஆயிரம் கோடிக்கு வாங்க வேண்டும் என்று கேட்க யாரும் இல்லை; ஆனால் நான் டிராக்டரில் குஷன் சீட்டில் அமர்ந்ததை விமர்சிப்பார்கள் என்று ராகுல் மோடியை விளாசியுள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் விவசாய மசோதாக்களை எதிர்த்து நடந்த டிராக்டர் பேரணியில் கலந்துகொண்ட ராகுல்காந்தி, டிராக்டரில் குஷன் சீட் போட்டு அமர்ந்து இருந்தார் என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி உள்ளிட்டோர் கிண்டல் செய்திருந்தனர். இதனையடுத்து, இந்த கிண்டல் பேச்சுக்குப் பதில் அளிக்கும் வகையில், ராகுல்காந்தி நேற்று பேசியதாவது, ”என் நலம் விரும்பிகளில் யாரோ ஒருவர், டிராக்டரில் சோபாவை போட்டுள்ளார்.
ஆனால், பிரதமர் மோடியின் வசதியான பயன்பாட்டுக்காக மக்கள் வரிப்பணத்தில் ரூ.8 ஆயிரம் கோடிக்கு புதிய ஏர் இந்தியா ஒன் விமானம் வாங்கப்பட்டுள்ளது. அந்த விமானத்தில் குஷன் சோபா மட்டுமின்றி, பிரதமர் மோடியின் வசதிக்காக 50 சொகுசு படுக்கைகள் உள்ளன. ஆனால் இங்கு அதையெல்லாம் கேள்வி கேட்க ஏன் யாரும் வருவதும் இல்லை பார்ப்பதும் இல்லை” என விமர்சித்துள்ளார்.
மோடியின் நண்பரான அதிபர் டிரம்ப், சொகுசு விமானம் வைத்திருப்பதால், பிரதமர் மோடியும் நம் நாட்டு மக்களின் வரிப் பணமான கோடிக்கணக்கான ரூபாயை வீணடித்து இந்த விமானத்தை வாங்கி உள்ளார் என ராகுல் காந்தி மோடியை விளாசியுள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!