India

8 தொழில்துறைகளின் உற்பத்தி ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 8.5% வீழ்ச்சி.. இனியாவது மோடி அரசாங்கம் விழிக்குமா?

நாடு முழுவதும் உள்ள நிலக்கரி, எண்ணெய், கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருட்கள், உருக்கு, சிமெண்ட், மின்சாரம் ஆகிய எட்டு தொழில் துறைகளின் உற்பத்தி கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டுமே 8.5 சதவிகிதம் வீழ்ச்சியை அடைந்துள்ளது என மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019ம் ஆண்டு இதே ஆகஸ்ட் மாதத்தில் மேற்குறிப்பிட்டுள்ள துறைகளில் 0.2 சதவிதம் அளவுக்கே வீழ்ச்சியை சந்தித்திருந்தது. இந்நிலையில், நடப்பு ஆண்டின் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரையில் இந்த 8 தொழில்துறைகளின் மொத்த உற்பத்தி 17.8 சதவிகிதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

அதன்படி, எஃகு, சுத்திகரிப்பு பொருட்கள், சிமென்ட், இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய் மற்றும் மின்சாரம் ஆகியவற்றின் உற்பத்தி முறையே 6.3%, 19.1%, 14.6%, 9.5%, 6.3% மற்றும் 2.7% வீழ்ச்சி அடைந்துள்ளது.

Also Read: மோடி அரசின் நிர்வாக தோல்வி : நடப்பு காலாண்டில் BHEL-லில் ரூ.893.14 கோடி வருவாய் இழப்பு!