India
“நிர்வாகத் திறனற்ற முதல்வர் யோகி ஆதித்யநாத்தை கோரக்நாத் மடத்திற்கே அனுப்ப வேண்டும்”: மாயாவதி ஆவேசம்!
மோடி ஆட்சியில் நாடுமுழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில், பா.ஜ.க ஆட்சி செய்யும் உத்தர பிரதேச மாநிலத்தில் சிறுபான்மையினர், தலித் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் வெகுவாக அதிகரித்துள்ளன.
உ.பி-யில் ஏராளமான குற்ற நிகழ்வுகள் நடந்துள்ளது சமீபத்தில் வெளியான செய்திகள் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குறிப்பாக, பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் வன்கொடுமை தாக்குதல்களின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. கடந்த வாரம் மட்டும் 18 பாலியல் வல்லுறவு சம்பவங்கள் நடந்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹத்ராஸ் சம்பவத்தைத் தொடர்ந்து பல்ராம்பூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் தலித் பெண் ஒருவர் பணி முடிந்து வீட்டுக்கு திரும்பி வந்துகொண்டிருக்கும் வேளையில் கும்பல் ஒன்று, அவரை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. மேலும், அந்தப் பெண்ணை கடுமையாக தாக்கவும் செய்திருக்கிறார்கள்.
படுகாயங்களுடன் மீட்கப்பட்ட அப்பெண் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதேபோன்று ஜியான்பூர் பகுதியில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த நபரால் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த பகுஜன்சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறுகையில், “மாநிலத்தின் சட்ட ஒழுங்கை பராமரிக்க முடியாத மாநில முதல்வரை, மத்திய அரசு கோரக்நாத் மடத்திற்கு அனுப்ப வேண்டும்; அங்குள்ள கோயில் அவருக்கு பிடிக்கவில்லை என்றால், அயோத்தியில் ராமர்கோயில் கட்டும் பணியை அவருக்கு வழங்கவேண்டும்.
ஹத்ரா பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்துள்ள அதே நாளில், பல்ராம்பூரிலும் இளம்பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார்.. பா.ஜ.க ஆட்சியின் கீழ் குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடி வருகின்றனர்” என அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!