India
வேளாண் சட்டங்களை நிராகரிக்க காங். ஆளும் மாநிலங்களில் சட்டமியற்றுவது குறித்து ஆலோசியுங்கள்: சோனியா காந்தி
மத்திய பா.ஜ.க அரசு கொண்டு வந்திருக்கும் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு மாநில விவசாயிகளும், தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
விவசாய விரோத மசோதாக்களுக்கு மக்களவையிலும், மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. எனினும் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கிடையே மசோதாக்கள் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டன.
இதையடுத்து, குடியரசுத் தலைவர் இந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது என எதிர்க்கட்சிகளும், விவசாயிகளும் வலியுறுத்தி வந்த நிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 3 வேளாண் மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்துள்ளார்.
நாட்டின் பல பகுதிகளில் விவசாயிகள் வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தி.மு.க கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று தமிழகத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், மத்திய அரசின் வேளாண் சட்டங்களை நிராகரிக்கும் வகையில் மாநில சட்டப்பேரவைகளில் சட்டம் இயற்றுவது குறித்து ஆலோசிக்குமாறு காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் கூறுகையில், “மத்திய அரசின் வேளாண் சட்டங்களை நிராகரிக்கும் உரிமை மாநிலங்களுக்கு உண்டு. அரசியல் சட்டத்தின் 254 (2)- வது பிரிவு இதற்கு அனுமதி வழங்குகிறது. இதனை பயன்படுத்தி மத்திய அரசின் வேளாண் சட்டங்களை நிராகரிக்கும் வகையில் மாநில சட்டப்பேரவைகளில் சட்டம் இயற்றுவது குறித்து ஆலோசிக்குமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களை கேட்டுக் கொண்டுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி முன்னிலை !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?