India
நாடாளுமன்ற விதிகளை மீறி மோடி அரசு வேளாண் மசோதாக்களை நிறைவேற்றியது அம்பலம் : மாநிலங்களவையில் நடந்தது என்ன?
விவசாயிகளுக்கு எதிரான வேளாண் மசோதாக்களை நிறைவேற்றிய போது, மாநிலங்களவையில் நடந்த உண்மைகளை மத்திய மோடி அரசு மூடி மறைத்திருப்பதும், விதிகளை மீறி மசோதாக்களை நிறைவேற்றப்பட்டிருப்பதும் ஆதாரங்களுடன் அம்பலமாகியுள்ளது.
விவசாய உற்பத்தி வணிகம் மற்றும் வர்த்தகம் மசோதா 2020, விவசாயிகள் விலை உத்தரவாதம் மற்றும் பண்ணை சேவைகள் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களை பெரும்பான்மையை பயன்படுத்தி, கடும் எதிர்ப்பையும் மீறி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மத்திய மோடி அரசு நிறைவேற்றியது.
இதற்கு விவசாயிகள், அரசியல் கட்சியினர் மற்றும் ஜனநாயக அமைப்பினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மாநிலங்களவையில் மோடி அரசுக்கு போதிய ஆதரவு இல்லாத நிலையில், குளறுபடி செய்து, குரல் வாக்கெடுப்பு நடத்தி மசோதாக்களை நிறைவேற்றியதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டினர்.
அதுமட்டுமல்லாது, மசோதாக்கள் மீது எதிர்கட்சிகள் அளித்த திருத்தங்கள் எதுவும் ஏற்கப்பட்டவில்லை என்றும் வேளாண் மசோதாக்களை தேர்வுக் குழுவிற்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையும் நிராகரித்து அவையை நடத்திய மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ், தன்னிச்சையாக செயல்பட்டதாகவும் புகார் தெரிவித்தனர்.
மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ்னுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருவதற்காக எதிர்கட்சி எம்.பிக்கள் மனு அளித்தனர். இதனிடையே, மசோதாக்களை தேர்வுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்ற தீர்மானத்தின் மீதான குரல் வாக்கெடுப்பின் போது, எதிர்கட்சிகள் யாரும் இருக்கையில் இல்லை; அதனால் அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகவும் ஹரிவன்ஷ் கூறியிருந்தார்.
ஆனால், ராஜ்யசபா டி.வியில் அன்றைய பிற்பகல் 1 மணி முதல் 1.30 மணிவரையிலான வீடியோ பதிவுகளை ஆய்வு செய்தபோது ஹரிவன்ஷ் கூறியது உண்மை இல்லை என்பது தற்போது அம்பலமாகியுள்ளது. தி.மு.க மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி கே.கே.ராகேஷ் ஆகியோர் தங்களது இருக்கையில் இருந்தனர். மேலும் கோரிக்கையை வலியுறுத்தி இருவரும் குரல் எழுப்பியதும் வீடியோவில் இருந்தது.
இதேப்போல், தீர்மானம் வாக்கெடுப்புக்கு வந்தப்போது தாம் அவையில் தான் இருந்ததாகவும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி டெரிக் ஓ பிரையன் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தபோது ராஜ்யசபா டி.வியின் நேரலையை துண்டித்ததும், விதிகளை மீறி வேளாண் மசோதாக்களை நிறைவேற்றியிருப்பதும் தற்போது தெரியவந்துள்ளது.
இதனை தி இந்தியன் எக்ஸ்பிரஸ், என்.டி.டி.பி ஆகிய ஊடங்கள் இதனை வீடியோ ஆதாரத்துடன் வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளன. இந்நிலையில், இத்தகைய புகாரை தி.மு.க மாநிலங்களவைக் குழுத் தலைவர் திருச்சி சிவா கடந்த வாரமே செய்தியாளர்களிடம் விளக்கினார். அப்போது அவர் கூறுகையில், ”ராஜ்யசபா டிவி எதிர்கட்சிகளை இருட்டடிப்பு செய்துவிட்டது. அது தனியார் தொலைக்காட்சி அல்ல; ராஜ்யசபாவின் தொலைக்காட்சி. அதன் மூலம் தான் மக்கள் அங்கு நடப்பதை பார்த்து எது சரி என்பதை தீர்மானிப்பார்கள்.
ஆனால், அதற்கு வழிவகை செய்யாமல் இவர்களை மட்டும் காட்டிவிட்டு உள்ளே என்ன நடந்து என வெளியே காட்டாமல் இருட்டடிப்பு செய்துவிட்டார்கள். முன்னதாக காஷ்மீர் பிரச்சனையின் போது இதனையேதான் செய்தார்கள். இப்போதும் செய்கிறார்கள்.
அதுமட்டுமல்லாது, எதிர்கட்சி எம்.பிக்கள் வைக்கும் கோரிக்கை அனைத்தையும் நிராகரித்துவிட்டார்கள். விவாதம் முழுவதும் நடந்த பிறகு மசோதாவை நிறைவேற்றலாம் என எதிர்கட்சி எம்.பி-க்கள் கூறிய போது அதனைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் அவையை தொடர்ந்து நடத்தினார்.
அப்போது, தீர்மானம் முன்னெடுப்புக்கு வந்த போது கே.கே.ராஜேஷின் நோட்டீஸ் வந்ததுபோது, ”நீங்கள் உங்கள் இருக்கையில் இல்லை” என கூறி எதிர்கட்சிகளின் கோரிக்கைகளை நிராகரித்துவிட்டார்கள். அதனால்தான் அவை பெரும் கொந்தளிப்புக்கு ஆளானது ” என அவர் கூறினார்.
இதன் மூலம் மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் உண்மைக்கு மாறாக செயல்பட்டதும், விதிமுறைகளை மீறி குரல் வாக்கெடுப்பின் மூலம் வேளாண் மசோதாக்களை நிறைவேற்றியதும் அம்பலமாகியுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!