India

இன்று தகவல் பெறும் உரிமை தினம் : ஆர்.டி.ஐ சட்டத்தை மறுத்து உண்மைகளை மறைக்கும் பா.ஜ.க அரசு!

கொரோனா ஊரடங்கால் சொந்த ஊர் திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பலர் உயிரிழந்தனர். அதுகுறித்த கேள்விகளுக்கு தகவல்கள் இல்லை என மத்திய அரசு சமீபத்தில் தெரிவித்தது. அதேபோல், தற்கொலை செய்துகொண்ட விவசாயிகள் தொடர்பான தகவல்களும் இல்லை என பா.ஜ.க அரசு தெரிவித்தது.

மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு எத்தனை மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர் எனும் கேள்விக்கும் தகவல்கள் பராமரிக்கப்படவில்லை என்கிற பதிலையே அளித்தது மத்திய பா.ஜ.க அரசு.

தொடர்ச்சியாக எந்த தகவலையும் வெளிப்படையாக அறிவிக்காத பா.ஜ.க தலைமையிலான NDA அரசு ((தேசிய ஜனநாயக கூட்டணி) என்றால் ‘எந்த தரவுகளும் இல்லை’ (NDA - No Data Available) அரசு என்று பொருள் என ஆளும் பா.ஜ.க அரசை காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் விமர்சித்தார்.

அவரை வழிமொழிந்த தி.மு.க எம்.பி கனிமொழி “NDA = NO DATA AVAILABLE தகவல் இல்லை என்பதே மத்திய அரசின் தாரக மந்திரமாகிவிட்டது” என விமர்சித்தார்.

இன்று உலக தகவல் உரிமை தினத்தையொட்டி காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி எம்.பி., கூறுகையில், “காங்கிரஸ் ஆட்சியில் உலக தகவல் உரிமை தினத்தில் ஆர்.டி.ஐ சட்டம் அமல்படுத்தப்பட்டது. இன்றைய தினத்தின் சாராம்சத்துக்கு ஆர்.டி.ஐ சட்டம் போன்ற ஒரு அர்ப்பணிப்பு வேறு எதுவும் இருக்க முடியாது.

எந்த ஒரு அதிர்வுடன் கூடிய ஜனநாயத்தையும் தாக்குவது தகவல்களை மறைப்பதாகும். பா.ஜக அரசு ஆர்.டி.ஐ சட்டத்தை மறுத்து உண்மையை மறைத்து வருகிறது.” எனத் தெரிவித்தார்.

Also Read: இனி NDA கூட்டணியில் பா.ஜ.க தவிர யார்தான் இருக்கிறார்கள்?