India
போதைப்பொருள் வழக்கு : தீபிகா படுகோன், சாரா அலி கான், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோருக்கு என்.சி.பி சம்மன்!
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த விவகாரத்தை சி.பி.ஐ விசாரித்து வருகிறது. இந்தநிலையில் அவருக்கு போதைப்பொருள் பழக்கம் இருந்ததாக அவரது காதலி ரியா சக்ரபோர்த்தி விசாரணையில் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் இறந்த பின்னர் பூதாகரமான போதைப்பொருள் வழக்கில் நடிகர்கள் தீபிகா படுகோன், சாரா அலி கான், ஷ்ரத்தா கபூர் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் ஆகியோருக்கு புதன்கிழமை சம்மன் அனுப்பியதையடுத்து நேரில் ஆஜராகவும் உத்தரவிட்டுள்ளது என்.சி.பி (Narcotics Control Bureau).
மேலும் ஆடை வடிவமைப்பாளரான சிமோன் கம்பட்டா மற்றும் சுஷாந்தின் மேலாளர் ஸ்ருதி மோடி ஆகியோரை விசாரிக்கவும் என்.சி.பி சம்மன் அனுப்பியுள்ளது.
தீபிகா படுகோன் மற்றும் அவரது மேலாளரை சம்பந்தப்படுத்துவதாக உள்ள வாட்ஸ் அப் தகவலில் நடிகை தீபிகா படுகோனின் மேலாளருக்கும் "டி" எனப்படும் நபருக்கும் இடையே நடந்த தகவல் பரிமாற்றத்தில், தடை செய்யப்பட்ட போதைப்பொருள் பயன்பாடு தொடர்பான தகவல்கள் கண்டறியப்பட்டதாக தேசிய போதைப்பொருள் தடுப்புத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த உரையாடல் காரனமாகத்தான் நடிகை தீபிகாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளாதாக கூறப்படுகிறது.
குவான் டேலண்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் ஊழியர் கரிஷ்மா பிரகாஷ் என்பவரின் பெயர் சமீபத்தில் பொதுவாக பேசப்பட்டது, இதனையடுத்து, செவ்வாயன்று சம்மன் அனுப்பிய என்.சி.பி கரிஷ்மா பிரகாஷ் மற்றும் குவான் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி துருவ் சிட்கோபேகரை நேரில் விசாரணைக்கு அழைத்தது.
கடந்த செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதி குவான் ஊழியரான நடிகை ரியாவின் மேலாளர் ஜெயா சஹாவை என்.சி.பி. விசாரித்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் தேசிய போதைப்பொருள் தடுப்புத்துறையின் விசாரணை அறிக்கை ஒன்றில், சுஷாந்த் சிங்கின் லோனாவாலா பண்ணைவீட்டில் உள்ள படகு ஓட்டி ஜகதீஸ் தாஸ் கூறுகையில் அவ்வப்போது அங்கு நடக்கும் பார்ட்டிகளில் சுஷாந்த் சிங், ரியா மற்றும் பலர் வருவார்கள் என்றும் அப்போது கஞ்சா மற்றும் மது அருந்துவது பொதுவாக நடக்கும் என்றும் கூறியுள்ளார்.
இந்த நிலையில், பாலிவுட் பிரபலங்களுக்கு போதைப்பொருள் கிடைப்பது எப்படி என்பது குறித்த விசாரணையை தேசிய போதைப்பொருள் தடுப்புத்துறை தனியாக விசாரித்து வருகிறது. மேலும் இந்த வழக்கில் இதுவரை 16 பேரை என்.சி.பி கைது செய்துள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!