India
வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு : சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி-க்கள் விடிய விடிய போராட்டம்..!
பா.ஜ.க அரசு கொண்டுவந்துள்ள வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கும் உத்தரவாத மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதாக்கள் விவசாயிகளுக்கு எதிரானவை என்றும், விவசாயிகள் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை பெறுவதை தடுக்கும் என கூறி எதிர்கட்சி எம்.பிக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
அந்த வகையில், இந்த மூன்று மசோதாக்கள் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா தவிர 2 மசோதாக்கள் மாநிலங்களவையில் நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டது. பெரும்பான்மை பலத்துடம் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதவுக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதன் ஒருபகுதியாக நேற்று முன்தினம் மாநிலங்களவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது எதிர்க்கட்சி எம்.பி.க்கள், மசோதா நகலை கிழித்து எறிந்தனர். மேலும் அவையின் மையப் பகுதியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவை வரம்பை மீறியதாக கூறி பாதுகாப்பு ஊழியர்கள் எதிர்க்கட்சி எம்.பி.க்களை அப்புறப்படுத்தியதால், அவையில் பெரும் அமளி ஏற்பட்டது. இந்நிலையில் நேற்றைய தினம் மசோதா தாக்கல் செய்த அமளியில் ஈடுபட்ட 8 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மீது அவைத்தலைவர் வெங்கையா நாயுடு நடவடிக்கை எடுத்தார்.
வெங்கையா நாயுடு நடவடிக்கைக்கு எதிராக மாநிலங்களவையில் எதிர்கட்சி எம்.பிக்கள் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நேற்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே நடவடிக்கை எடுக்கப்பட்ட எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலையின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தி.மு.க, தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் , ராஷ்ட்ரிய ஜனதா தளம், சி.பி.ஐ, சி.சி.ஐ(எம்), தெலுங்கு ராஷ்ட்ரிய சமிதி உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், பா.ஜ.க அரசு கொண்டுவந்துள்ள விவசாயிகள் விரோத வேளாண் மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் ஜனநாயகத்துக்கு விரோதமான வகையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், அந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கவேண்டாம் என குடியரசுத் தலைவருக்கு எதிர்க்கட்சிகள் கடிதம் எழுதியுள்ளன.
இந்நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட எம்.பிக்கள் இரவு முழுவதும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தற்போது வரை, அவர்கள் வெளியேறாமல் வளாகத்திலேயே அமர்ந்திருந்திருந்து போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
காலையில், தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்ட8 எம்.பிக்களுக்காக மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் டீ கொண்டுவந்துகொடுத்தார். அந்த டீயை சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்கள் வாங்க மறுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!