India
“ரூ.2000 நோட்டுகள் அடுத்த ஒரு வருடத்தில் மறைந்துவிடும்” : என்ன சொல்கிறது ஆர்.பி.ஐ ? - அதிர்ச்சி தகவல்!
கடந்த 2016-ம் ஆண்டு மத்திய அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. இதனையடுத்து முன்னர் புழக்கத்திலிருந்த 1,000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது.
பின்னர் புதிதாக 2,000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை ஆர்.பி.ஐ அறிமுகப்படுத்தியது. இந்த நோட்டுகள் தற்போது புழக்கத்தில் இருந்து வருகின்றன. இந்நிலையில் மூன்றாண்டுகளுக்கும் மேலாக புழக்கத்தில் இருந்து வந்த 2,000 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
அதேவேளையில் கருப்புப் பணம் ஒழிப்பு, கள்ள நோட்டுகளை ஒழிப்பதற்காக கொண்டுவரப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகள் மூலம் கருப்புப் பணத்தையும், கள்ள நோட்டுகளையும் ஒழிக்கமுடியாமல் போனதாகவும் புகார்கள் எழுந்தவண்ணம் உள்ளது.
இதனால் 2000 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு புழக்கத்திலிருந்து நீக்கப்போவதாக செய்திகள் வெளியாகின. மேலும், பெரும்பாலான ஏ.டி.எம்களில் 2000 ரூபாய் நோட்டுகள் நிறுத்தப்பட்டதாகவும் செய்திகள் பரவின.
இந்த செய்திகளை உண்மையாக்கும் வகையில், 2019-20 நிதியாண்டில் புதிதாக 2000 ரூபாய் நோட்டுகள் ஒன்றுகூட அச்சிடப்படவில்லை என்ற மற்றொரு செய்தியும் வெளிவந்தது. அதாவது, 2018-ம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் ரூபாய் 2000 நோட்டுகளின் புழக்கம் 33,632 லட்சமாக இருந்தது என்றும் 2020-ம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் ரூபாய் 2000 நோட்டுகளின் புழக்கம் 27,398 லட்சமாகக் குறைந்துள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரியவந்துள்ளது.
அதேப்போல் ரூ .1 லட்சம் கோடிக்கு மேல் மதிப்புள்ள ரூ .2,000 நோட்டுகள் ஒரு வருடத்தில் மறைந்துவிடும் என்று ரிசர்வ் வங்கி தரவு காட்டுகிறது. அதாவது, ரூ .1.1 லட்சம் கோடி மதிப்புள்ள ரூ .2,000 நோட்டுகளின் ஒட்டுமொத்த மதிப்பு 2019-20 நிதியாண்டில் கணிசமாக ரூ .5.4 லட்சம் கோடியாக குறைந்துள்ளது. இது முந்தைய 2018-19 நிதியாண்டில் ரூ .6.5 லட்சம் கோடியாக இருந்துள்ளது.
அதேவேளையில், ரூ .500 நோட்டுகளின் மொத்த மதிப்பு 2018-19 நிதியாண்டில் ரூ .10.7 லட்சம் கோடியாக இருந்தது. இப்போது, 2019-20 நிதியாண்டில் ரூ .14.7 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
அதுமட்டுமின்றி, ரிசர்வ் வங்கி தனது வருடாந்திர அறிக்கையில், 2020-ம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் புழக்கத்தில் 2000 ரூபாய் நோட்டுகளின் அளவு 2.4 சதவிகிதமாக இருந்தது. இதுவே கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் இருந்த அளவைவிட சுமார் 3.3 சதவிகிதம் குறைவாகும். 2000 ரூபாய் நோட்டுகளின் நிலைமை சரிவில் இருக்கும் இதேவேளையில், 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளின் அளவு மற்றும் மதிப்பு கடந்த மூன்று ஆண்டுகளில் அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
கொரோனா காரணமாக, நிறுத்தப்பட்டிருந்த, ரூபாய் நோட்டுகள் அச்சிடும் பணி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். மத்திய மற்றும் மாநில அரசுகளின் வழிகாட்டுதலின்படி படிப்படியாக நோட்டுகளை அச்சிடும் பணி தொடங்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
Also Read
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!