India

கொரோனா பாதிப்பு: அரை கோடியை தாண்டியது இந்தியா.. இன்னும் பொய் சொல்ல என்ன இருக்கிறது மிஸ்டர் பிரதமரே?

இந்தியாவில் பிப்ரவரி மாதத்தில் தொடங்கிய கொரோனா பரவல் பல ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்ட பிறகும் ஓயவில்லை. இதுகாறும் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்துள்ளது.

நேற்றைய (செப்.,15) நிலவரப்படி கடந்த 15 நாட்களில் மட்டுமே 12 லட்சத்து 39 ஆயிரத்து 97 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அதேச்சமயத்தில் இந்த காலகட்டத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்து 488 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 90 ஆயிரத்து 123 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து நாட்டில் மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50 லட்சத்து 20 ஆயிரத்து 359 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் கடந்த 24 மணிநேரத்தில் 1,290 ஆக பலியானதை அடுத்து மொத்த உயிரிழந்தோரின் எண்ணிக்க 82 ஆயிரத்து 66 ஆக அதிகரித்துள்ளது. இதே நிலை தொடர்ந்தால் அடுத்த 10 நாட்களில் அமெரிக்காவின் பாதிப்பையே மிஞ்சி உலகளவில் முதலிடத்தை இந்தியா பெரும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை.

Also Read: பிரதமர் மோடி மயில்களுடன் பிஸியாக இருப்பதால், நம்மை நாம்தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் - ராகுல் காந்தி