India
ஊரடங்கு காலத்தில் எடுக்கப்பட்ட பி.எஃப் தொகை எவ்வளவு தெரியுமா? - தொழிலாளர் அமைச்சகம் தகவல்!
இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா தொற்று தீவிரமடைந்ததை அடுத்து நாடு முழுவதும் திட்டமிடப்படாத பொது முடக்கத்தை மத்திய மநில அரசுகள் அறிவித்தன. இந்த கொரோனா காலத்தில் பல லட்சம் தொழிலாளர்கள் வேலையை இழந்தனர் மற்றும் வருமானம் இல்லாமல் மக்கள் மிகவும் சிரமமான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டனர். இந்தியப் பொருளாதாரமோ படு வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது மத்திய அரசின் மெத்தனப் போக்கைக் காட்டியது.
இந்தநிலையில் மாத வருமானம் பெறும் தொழிலாளர் குடும்பங்கள் வருமானம் இல்லாமல் மிகவும் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டனர். இந்த சூழ்நிலையில் வேலையிழந்த மற்றும் வருமானம் இல்லாத தொழிலாளர்கள் தங்களின் வறுமை காரணமாகவும் வாழ்வாதாரத்திற்கும் தங்களின் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை பெற்றுள்ளனர்.
இந்த ஊரடங்கு காலத்தில் மட்டும், மார்ச் 25 முதல் ஆகஸ்ட் 31 வரை ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்) கணக்குகளிலிருந்து 39,400 கோடி ரூபாயை மாத சம்பள ஊழியர்கள் திரும்பப் பெற்றுள்ளனர் என்று மத்திய தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்தது.
இதில், 40% க்கும் அதிகமானவர்கள் மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய மூன்று தொழில்துறை மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் உள்ள இபிஎஃப் சந்தாதாரர்கள், 87,837.85 கோடியைத் திரும்பப் பெற்றனர், கர்நாடகாவில் இந்த எண்ணிக்கை, 75,743.96 கோடியாகவும், புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில், திரும்பப் பெறும் தொகை 94,984.51 கோடி எனத் தெரியவந்துள்ளது.
Also Read
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!
-
”தொழில் தொடங்க தமிழ்நாட்டிற்கு வாருங்கள்” : மலேசியா தமிழ்ச் சங்கத்தில் பேரவைத் தலைவர் அப்பாவு பேச்சு!
-
”தமிழ் குறித்து எங்களுக்கு எவரும் பாடம் எடுக்க வேண்டியதில்லை” : அமைச்சர் கீதா ஜீவன்
-
சென்னை மாணவர்களுக்கு Good News : இன்று திறக்கப்பட்ட ’முதல்வர் படைப்பகம்’ - 5 முக்கிய சிறப்புகள் என்ன?