India
“கொரோனா ஒழிந்துவிட்டது” - நாள்தோறும் 3,000 பேர் பாதிக்கப்படும் சூழலில் அறிவித்த பா.ஜ.க தலைவரால் சர்ச்சை!
“கொரோனா வைரஸ் ஒழிந்துவிட்டது. ஆனால், பா.ஜ.க பேரணி நடத்துவதைத் தடுக்கவே மம்தா பானர்ஜி ஊரடங்கு விதிக்கிறார்” என்று மேற்கு வங்க பா.ஜ.க தலைவர் திலிப் கோஷ் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சத்தை எட்டி வருகிறது. இந்தியாவில் நாள்தோறும் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இன்றைய நிலவரப்படி 45 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
மேற்கு வங்க மாநிலத்தில் இதுவரை 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3,700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டும் 3,112 புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சூழவில் கொரோனா ஒழிந்துவிட்டது என்று மேற்கு வங்க மாநில பா.ஜ.க தலைவர் திலீப் கோஷ் பேசியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு கண்டனங்கள் எழுந்துள்ளன.
மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஹூக்ளி மாவட்டத்தில் பா.ஜ.க சார்பில் நேற்று பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பா.ஜ.க மாநிலத் தலைவர் திலீப் கோஷ், “கொரோனா வைரஸ் ஒழிந்துவிட்டது. ஆனால், பா.ஜ.கவின் வளர்ச்சியை தடுக்கும் நோக்கில், பேரணிகளை நடத்தவிடாமல் முதல்வர் மம்தா பானர்ஜி ஊரடங்கு விதிக்கிறார்.
ஊரடங்கு அமலில் இருப்பதால் பா.ஜ.க-வால் பொதுக்கூட்டங்கள், பேரணிகளை நடத்த முடியாமல் போகிறது. இனி நாமாகவே தேர்தல் பேரணிகளை நடத்த வேண்டியதுதான்” எனப் பேசியுள்ளார்.
Also Read
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!