India
பப்ஜி விளையாட முடியாததால் கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை : ‘கேம்’ மோகத்தால் நடந்த சோகம்!
கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக் காரணமாக உலகம் முழுவதும் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் தொலைக்காட்சி பார்ப்பது, செல்போன் பயன்படுத்துவது வீடியோ கேம் விளையாடுவது போன்ற செயல்பாடுகள் அதிகரிக்கத் தொடங்கியதாக ஆய்வறிக்கை கூறுகிறது.
அதுமட்டுமின்றி, ஊரடங்கு காலத்தில் குடும்ப வன்முறை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளில் மூழ்குவது போன்றவற்றால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் ஊரடங்கு நாட்களை கழிப்பதற்கு உலகம் முழுவதுமே பெரும்பாலானோர் வீடியோ கேம் விளையாட்டில் மூழ்கிவிடுகின்றனர்.
மக்கள் மத்தியில் பிரபலமடையும் வீடியோ கேம்கள் அவ்வப்போது விபரீதத்தை ஏற்படுத்தவும் தவறுவதில்லை. முன்னதாக வந்த ப்ளூவேல் வீடியோ கேம் போன்று தற்போது இளைஞர்களை ஆட்கொண்டு வருகிறது ‘பப்ஜி’ மோகம்.
இவை வெறும் விளையாட்டுகளாக மட்டும் இல்லாமல் பல்வேறு உடல் உபாதைகளையும் ஏற்படுத்திவிடுகின்றன. சில சமயங்களில் உயிரையும் காவு வாங்கும் அளவுக்கு அபாயகரமானதாக உள்ளதாக ‘பப்ஜி’ விளையாட்டை தடை செய்யவேண்டும் என நீண்ட நாள் கோரிக்கை இருந்து வந்தது.
இந்நிலையில், லடாக்கில் சீனாவின் அச்சுறுத்தல் காரணமாக மீண்டும் பதற்றம் நிலவுகின்ற நிலையில், கடந்த 2ம் தேதி இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள பப்ஜி உள்ளிட்ட 118 சீன மொபைல் ஆப்களை மத்திய அரசு தடை செய்துள்ளது.
இந்தியாவில் பப்ஜி கேமிங் ஆப்பின் பயனாளர்கள் மட்டும் கிட்டத்தட்ட 3.3 கோடி பேர் இருப்பார்கள். பதின் வயதினர் முதல் இளைஞர்கள் வரை ஆண்கள் பெண்கள் பேதமற்று பலர் விளையாடிவரும் அந்த விளையாட்டை மத்திய அரசு தடை செய்து உத்தரவிட்டுள்ளது.
பப்ஜி தடையால் பெரும்பாலான பெற்றோர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். அதேநேரத்தில், பப்ஜி விளையாட்டில் மூழ்கிப்போன இளைஞர்கள் பலர் அந்த விளையாட்டை விளையாட முடியாமல், மன உளைச்சலில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், மேற்கு வங்கத்தில் பப்ஜி விளையாட முடியாத காரணத்தினால் கல்லூரி மாணவர் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் புர்பா லால்பூர் பகுதியை சேர்ந்தவர் பிரிதம் ஹால்டர். இவர் ஐடிஐ-யில் படித்து வந்துள்ளார்.
பப்ஜி கேம் வந்த நாளில் இருந்து தொடர்சியாக இரவு நேரங்களில் பப்ஜி கேம் விளையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் பிரிதம். இந்த நிலையில் செப்டம்பர் 2ம் தேதி பப்ஜி தடைவிதிக்கப்பட்ட நாளில் இருந்து மிகுந்த விரக்தியாக இருந்த பிரிதம், நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நீண்ட நேரமாகியும் அறையில் இருந்து மகன் வெளியே வராததால் கதவை உடைத்துக்கொண்டுப் பார்த்தப்போது தூக்கில் தொங்கிய நிலையில் பிரிதம் உயிரிழந்து கிடந்துள்ளார்.
இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். பின்னர், போலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக போலிஸார் வழக்குப் பதிவு விசாரணை நடத்தியத்தில், பப்ஜிவிளையாட முடியாத விரக்தியில்தான் மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!