India
மங்கும் மோடி பிம்பம் : பா.ஜ.க அரசு தொடர்பான வீடியோக்களுக்கு தெறிக்கும் டிஸ்லைக்ஸ்!
பா.ஜ.க முன்னிறுத்தும் மோடியின் பிம்பம் சமூக வலைதளங்களில் கடும் சறுக்கலைச் சந்தித்து வருகிறது. மோடியின் வீடியோக்களுக்கு டிஸ்லைக்குகள் குவிகின்றன.
வெகுமக்களுக்கு எதிரான பா.ஜ.க அரசின் நடவடிக்கைகளும், கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதில் பா.ஜ.க அரசு அடைந்த தோல்விகளும், பொருளாதார அழுத்தங்களும் சேர்ந்து மோடிக்கு எதிராக மக்களைத் திரளச் செய்துள்ளன.
பா.ஜ.க அரசின் மீதான கோபத்தை மக்கள், மோடி உரை வீடியோக்களுக்கு டிஸ்லைக் செய்வதன் மூலம் தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில், மோடி பேசிய ‘மன் கி பாத்’ உரைக்கு பல லட்சக்கணக்கானோர் டிஸ்லைக்குகளை கொட்டி தங்கள் எதிர்ப்பைக் காட்டினர்.
மேலும், கொரோனா அச்சுறுத்தல் காலத்திலும் நீட், ஜே.இ.இ தேர்வுகளை நடத்தியே தீருவது என பிடிவாதம் செய்து, மாணவர்களின் உயிரோடும், எதிர்காலத்தோடும் விளையாடும் பா.ஜ.க அரசுக்கு எதிராக மாணவர்களும் கிளர்ந்தெழுந்துள்ளனர்.
பா.ஜ.க தலைவர்கள் தொடர்பான ஒவ்வொரு வீடியோவுக்கும் டிஸ்லைக்குகள் தெறிக்கின்றன. இன்று பா.ஜ.க-வின் யூ-ட்யூப் பக்கத்தில் வெளியிடப்பட்ட 'தேசிய கல்விக் கொள்கை’ தொடர்பான ஆளுநர்கள் மாநாட்டில் மோடி பேசிய வீடியோவுக்கு சில மணி நேரங்களில் லைக்குகளை விட டிஸ்லைக் எண்ணிக்கை பல மடங்கு எகிறியிருக்கிறது.
சமூக வலைதளங்களில் பொய்ப் பிரச்சாரங்களைப் பரப்பி, பல்வேறு மோசடிகளைச் செய்து உருவாக்கப்பட்ட மோடி பிம்பம், தற்போது உண்மைக்கு முகம் கொடுக்க இயலாமல் மங்கி வருகிறது.
மிகப்பெரிய குழுக்களின் மூலம், தகவல்களை வெகுவேகமாகப் பரப்பி நாடு முழுவதும் பொய்களைக் கட்டமைத்த பா.ஜ.க, இன்று மக்களின் டிஸ்லைக்குகளை எதிர்கொள்ள முடியாமல் டிஸ்லைக் பட்டனையே நிறுத்தி வைக்கும் அவலம் ஏற்பட்டிருக்கிறது.
Also Read
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்