India
கருத்துக்காக கொல்லப்பட்ட கெளரி லங்கேஷ் நினைவு தினம் : தமிழகத்திலும் இந்த நிலை வருமுன் தடுக்க முடியுமா?
கர்நாடகாவில் வெளியாகும் 'லங்கேஷ்' என்ற கன்னட வார இதழின் ஆசிரியராகப் பணியாற்றியவர் கௌரி லங்கேஷ். இவர் பத்திரிகையாளராக மட்டுமல்லாமல் சமூக செயற்பாட்டாளராகவும் செயல்பட்டு வந்தார்.
மேலும், இந்துத்வா கொள்கைகளுக்கு எதிராக, மோடி அரசின் பாசிச போக்கை கண்டித்து வந்ததால் இந்துத்வா கும்பலால் படுகொலை செய்யப்பட்ட கோவிந்த் பன்சாரே, நரேந்திர தபோல்கர், கல்புர்கி போன்றோருக்காவும் வலுவாக குரல் எழுப்பியவர் கௌரி லங்கேஷ்.
அச்சுறுத்தல் மூலம் கௌரி லங்கேஷை எதுவும் செய்யமுடியாத மத வெறியர்கள், அவரின் குரலை ஒடுக்க கோவிந்த் பன்சாரே, நரேந்திர தபோல்கர், கல்புர்கி போன்றோரை படுகொலை செய்ததைப்போலவே, கௌரி லங்கேஷையும் படுகொலை செய்தனர்.
2017ம் ஆண்டு இதே நாளில் பணி முடிந்து இரவு 8 மணிக்கு வீட்டுக்கு திரும்பியபோது இரு சக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் கைத்துப்பாக்கி கொண்டு 7 முறை சுட்டது. துப்பாக்கிச் சூட்டில் கௌரி லங்கேஷின் மார்பு, கழுத்து, வயிறு ஆகிய பகுதிகளில் குண்டு பாய்ந்து அதே இடத்தில் உயிரிழந்தார்.
பின்னர் நடைபெற்ற விசாரணையில் இந்துத்வா அமைப்பைச் சேர்ந்த பரசுராம் வாக்மோர், பிரவீன்குமார், நவீன்குமார் உட்பட 6 பேரைக் கைது செய்து போலிஸார் விசாரணை நடத்தினார்கள்.
கெளரி லங்கேஷ் கொல்லப்பட்டு, இன்றுடன் மூன்றாண்டுகள் நிறைவடைகின்றன. ஆனால், அவரது மரணத்திற்கு காரணமான குண்டர்கள் தற்போது வரை தண்டிக்கப்படவில்லை. குற்றவாளிகளை கைது செய்யவேண்டி ஜனநாயக அமைப்பினர் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.
ஆனால் அந்தக் குரல்கள் ஆட்சியாளர்களின் காதுகளில் எட்டவில்லை என்பதே இந்த வழக்கு நமக்குச் சொல்லும் உண்மை. கொல்லப்பட்டு மூன்று வருடங்கள் ஆனபோதும் கூட இன்னும் கெளரி லங்கேஷ் பெயரை பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்துத்வா கும்பலைச் சேர்ந்தவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
அதாவது, மத்திய பா.ஜ.க அரசின் அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுப்போரை அச்சுறுத்தும் வகையில், கெளரி லங்கேஷ் போன்றோருக்கு நடந்தது தங்களுக்கும் நடக்கலாம் என வெளிப்படையாகவே கூறிவருகின்றனர். அப்படி சமீபத்தில் கூட பா.ஜ.க பிரமுகர் கல்யாணராமன், நரேந்திர தபோல்கர், கல்புர்கி, கெளரி லங்கேஷ் ஆகியோர் நினைவுக்கு வருவதாக மிரட்டல் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
தமிழகத்தில் காலூன்ற நினைக்கும் பா.ஜ.க, தற்போது ரவுடிகளை கட்சியில் சேர்க்கத் துவங்கியுள்ளது. வட மாநிலங்களில் நடக்கும் கலவரத்தை போன்று தமிழகத்தில் கலவரம் ஏற்படுத்தவே பா.ஜ.க தொடர்சியாக ரவுடிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதாக குற்றச்சாட்டு உள்ளது.
மேலும் தமிழக அரசியலில் இதுவரை இல்லாத அளவுக்கு ரவுடிகளை இணைப்பதை குறிக்கோளாக கொண்டிருக்கும் பா.ஜ.க நிர்வாகிகள் தற்போது மேடைகளிலேயே துப்பாக்கி போன்ற ஆயுதங்களைக் காட்டி அச்சுறுத்தும் வேலைகளில் இறங்கியுள்ளனர்.
பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது பட்டாக்கத்தி வைத்து கேக் வெட்டும் ரவுடிகளை உடனே கைது செய்யும் காவல்துறை துப்பாக்கி வைத்து புகைப்படம் வெளியிட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் வினோஜ் செல்வம் மீது ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் இதுபோன்ற பா.ஜ.க அரசின் வன்முறை அரசியலை முன்பே தடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
Also Read
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!