India

“ ‘சிங்கம்’ போன்ற படங்களை பார்த்து பெருமை கொள்ளாதீர்கள்” - இளம் IPS அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை!

தெலங்கானாவின் ஐதராபாத்தில் உள்ல சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலிஸ் அகாடமியில் பயிற்சி பெற்ற இளம் ஐபிஎஸ் அதிகாரிகளுடன் இன்று (செப்.,5) பிரதமர் மோடி காணொலி வாயிலாக கலந்துரையாடினார்.

அப்போது, காவல்துறை சீருடை அணிவது குறித்து தாங்கள் அனைவரும் பெருமை கொள்ளவேண்டும். மாறாக, அதன் மீதான அதிகாரத்தினை எப்படி பயன்படுத்திக் கொள்வது என நினைக்கக் கூடாது.

சிங்கம் போன்ற போலிஸ் கதைக் கொண்ட படங்களை பார்த்ததும் புதிதாக பணியில் சேரும் காவல்துறையினர் எவரும் போலிஸை கண்டு பயப்பட வேண்டும் என்று நினைக்கக் கூடாது. இதன் மூலம் பணிகள் புறக்கணிக்கப்படுகிறது. இதனை தவிர்க்க வேண்டும்.

சாமானிய மக்களிடம் காவல்துறையினர் கனிவுடனும் எளிமையாகவும் பழக வேண்டும். காக்கிச் சட்டைக்கான மரியாதையை இழந்துவிடக் கூடாது. பணி சார்ந்த மன அழுத்தங்கள் ஏற்பட்டால் யோகா பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என கூறிய பிரதமர் மோடி கொரோனா ஊரடங்கு நேரத்தில் காவல்துறையினர் ஆற்றிய பணிக்கு பாராட்டு தெரிவித்தார்.

Also Read: வாய் வித்தையாக இருக்கிறதா மோடி அரசின் தடுப்பு நடவடிக்கைகள்?: இந்தியாவில் பாதிப்பு 40 லட்சத்தை நெருங்கியது