India
#PUBG #LUDO உள்ளிட்ட 118 சீன செயலிகளுக்கு இந்தியாவில் தடை!
லடாக்கில் சீனாவின் அச்சுறுத்தல் காரணமாக மீண்டும் பதற்றம் நிலவுகின்ற நிலையில், இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள பப்ஜி உள்ளிட்ட 118 சீன மொபைல் ஆப்களை மத்திய அரசு தடை செய்துள்ளது.
இந்தியாவில் பப்ஜி கேமிங் ஆப்பின் பயனாளர்கள் மட்டும் கிட்டத்தட்ட 3.3 கோடி பேர் இருப்பார்கள். பதின் வயதினர் முதல் இளைஞர்கள் வரை ஆண்கள் பெண்கள் பேதமற்று பலர் விளையாடிவரும் வேளையில் அந்த கேம் ஆப்போடு சேர்த்து 118 செயலிகளை மத்திய அரசு தடை செய்து உத்தரவிட்டுள்ளது.
ஒரு நாளுக்கு பப்ஜி கேமை 1.3 கோடி பேர் விளையாடி வந்தார்கள். இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு உள்ளிட்டவற்றுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் அந்த ஆப்கள் செயல்படுவதால், தகவல் தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 69ஏ-ன் படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவின் சைபர் வெளியின் பாதுகாப்பை காக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது பல கோடி இந்தியர்களின் நலனை கருத்தில்கொண்டும் எடுக்கப்பட்ட முடிவு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில ஆண்டிராய்ட் மற்றும் ஐஓஎஸ் மொபைல் ஆப்கள் பயனாளர்களுக்கே தெரியாமல் அவர்களைப் பற்றிய தரவுகளை சேகரித்து இந்தியாவுக்கு வெளியே அனுப்புவதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது. இது போன்று குடிமக்களின் தரவுகள் வெளிநாடுகளுக்கு செல்வதால் அது தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
’சமத்துவம் மலரட்டும்' : பள்ளி பெயர் பலகையில் இருந்த ‘அரிசன் காலனி’ என்பதை அழித்த அமைச்சர் அன்பில் மகேஸ்!
-
”மழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
ரூ.80 கோடி : 12,100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”உ.பி மக்களுக்கு நீதி வழங்க வேண்டும்” : துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிரியங்கா காந்தி கண்டனம்!
-
தமிழ்நாடு சட்டப்பேரவை டிசம்பர் 9ஆம் நாள் கூடுகிறது! : சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!