India
“2022 வரை என்னை சிறையில் அடைக்க திட்டமிட்டார்கள்”: சிறையில் இருந்து விடுதலையான டாக்டர்.கபீல் கான் பேட்டி!
உத்தர பிரதேச மாநிலம், கோரக்பூர் அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் சிலிண்டர் பற்றாக்குறை நிலவியபோது, சொந்த செலவில் ஆக்சிஜன் சிலிண்டர் வாங்கி, ஏராளமான குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றியவர் கபீல் கான்.
ஆனால், உத்தர பிரதேச பா.ஜ.க அரசு, தனது தவறை மறைப்பதற்கு, மருத்துவர் கபீல்கான் மீதே பழியைத் தூக்கிப் போட்டது. அவரைக் கைது செய்து சிறையிலும் அடைத்தது. நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பின், கபீல் கான் தற்போது விடுதலையானார். விடுதலையானதில் இருந்து மத்திய அரசின் மோசமான திட்டங்களுக்கு எதிராக தனது குரலைப் பதிவு செய்தார்.
அந்தவகையில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக, அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர் போராட்டத்தில், மருத்துவர் கபீல் கான் வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசினார் என்று கூறி, அவரை உத்தர பிரதேச போலிஸார் மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சட்டப்பிரிவு 153-வின் கீழ் (இரு பிரிவினரிடையே வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக) அலிகார் சிவில் லைன் காவல்நிலையத்தில் கடந்த டிசம்பர் 13-ம் தேதியே கபீல்கான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்பிறகு 40 நாட்கள் கழித்து மும்பையில் நடைபெறும் CAA எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளச் சென்ற கபீல் கானைப் பின்தொடர்ந்த போலிஸார் அவரை மீண்டும் கைது செய்து செய்தது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கீழ் சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கை எதிர்த்து கபீல் கானின் உறவினர் நுஷாத் பர்வீன், அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்தது. அந்த தீர்ப்பில், கஃபீல் கான் ஒற்றுமையை வளர்க்கும் வகையில்தான் பேசினார் என்று கூறி, ஜாமினில் விடுதலை செய்ய உத்தரவிட்டனர்.
கபீல் கானின் ஜாமினில் விடுதலையானதையெட்டி பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இதுதொடர்பாக கபீல் கான் கூறுகையில், “உ.பி-யில் சுகாதா அமைப்பு உடைந்து போயுள்ளது. நான் சுகாதாரம் பற்றி பேசுவேன் என்பது அவர்களுக்குத் தெரியும். அதனால்தான் என் வாயை அடைக்க திட்டமிட்டனர். என்னை 2022 வரை சிறையில் வைத்திருக்க திட்டமிட்டதாக நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!