India
மத்திய அரசின் ஆத்மநிர்பார் இணையதளத்தில் பதிந்த 69 லட்சம் பேரில் வெறும் 7,700 நபர்களுக்கு மட்டுமே வேலை!?
மோடி அரசால் தொடங்கப்பட்ட ஆத்ம நிர்பார் இணையதளத்தில் பதிந்துகொண்ட 7 லட்சம் பேரில் வெறும் 691 நபர்களுக்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளது.
ஆளும் மோடி அரசால் தொடங்கப்பட்ட அசீம் (ASEEM) ஆத்மநிர்பார் இணையதளத்தில் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் ஆகஸ்ட் 21-ம் தேதி வரை மட்டும் 7 லட்சம் பேர் வேலைக்காக விண்ணப்பித்துள்ளனர். அதில் 691 நபர்களுக்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஜுலை மாதம் தொடங்கப்பட்ட இந்த இணையதளத்தில் 40 நாட்களில் மட்டும் 69 லட்சம் பேர் பதிந்துகொண்டுள்ளனர். இந்த இணையதளத்தில் பதிந்துகொண்ட 69 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்களில் 1.49 லட்சம் நபர்களுக்கு வேலை வழங்கப்பட்டதாகவும், அதிலும் 7,700 நபர்கள் மட்டுமே வேலையில் இணைந்தனர் என்பதும் தெரியவந்துள்ளது.
இந்த தரவுகளை மத்திய திறன் வளர்ப்பு மற்றும் தொழில் முனைவு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. மேலும் இந்த இணையதளம் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மட்டுமில்லை எனவும், இந்த இணையதளத்தில் சொந்த தொழில் செய்யும் தையற்காரர்கள், எலெக்ட்ரீசியன்கள், செவிலியர்கள், விற்பனை முகவர்கள், கொரியர் டெலிவரி செய்பவர்கள், தையல் இயந்திர ஆபரேட்டர்கள் என பலருக்குமான ஒன்று எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பச் சென்றதால், அவர்கள் செய்யும் பணிகளுக்கான தேவை 80% சதவீதம் உயர்ந்துள்ளது. ஆனால் புலம்பெயர் தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்படுவது 9.87% சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது.
இந்த இணையதளத்தில் 514 நிறுவனங்கள் பதிந்துகொண்டுள்ளதாகவும், அதில் 443 நிறுவனங்கள் 2.92 லட்ச பணிகளுக்கு ஆட்கள் தேவை என்று அறிவித்திருந்ததாகவும், அதில் 1.49 லட்சம் வேலை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், 7,700 நபர்கள் மட்டுமே வேலையில் இணைந்தனர் எனத் தெரியவந்துள்ளது.
Also Read
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!
-
”தொழில் தொடங்க தமிழ்நாட்டிற்கு வாருங்கள்” : மலேசியா தமிழ்ச் சங்கத்தில் பேரவைத் தலைவர் அப்பாவு பேச்சு!
-
”தமிழ் குறித்து எங்களுக்கு எவரும் பாடம் எடுக்க வேண்டியதில்லை” : அமைச்சர் கீதா ஜீவன்
-
சென்னை மாணவர்களுக்கு Good News : இன்று திறக்கப்பட்ட ’முதல்வர் படைப்பகம்’ - 5 முக்கிய சிறப்புகள் என்ன?