India

“கடந்த16 நாட்களில் 10 லட்சம் பேருக்குப் தொற்று உறுதி” : இந்தியாவில் 30 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு!

கொரோனா வைரஸ் தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக உலக நாடுகளைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வருகிறது கொரோனா பெருந்தொற்று.

உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றுக்கு 23,382,074 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் சுமார் 808,697 பேர் கொரோனா தொற்றால் பலியாகி உள்ளனர். அதிகட்சமாக அமெரிக்காவில் மட்டும் 5,841,428 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 180,174 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு 30 லட்சத்தை தாண்டியது. கடந்த 24 மணி நேரத்தில் 69,239 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் ஒரே நாளில் 912 உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் இதுவரை இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 30,44,940 ஆகவும், யிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 56,706 ஆக அதிகரித்துள்ளது. மேலும் குணமடைந்தோர் எண்ணிக்கை 22,80,566 ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய கணக்குகள் படி குணமடைவோர் 75% ஆக உள்ளது.

கொரோனாவால் நாள்தோறும் 50 ஆயிரம் பேருக்குப் பாதிப்பு என்பது நீடிக்கிறது. அதுமட்டுமல்லாது, கடந்த16 நாட்களில் மட்டும் 10 லட்சம் பேருக்குப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த ஒரு மாதமாகத்தான் கொரோனா சோதனைகள் அனைத்து மாநிலங்களிலும் அதிக அளவில் நடத்தப்படுகிறது. தற்போது நாள் ஒன்றுக்கு ஐந்து லட்சத்துக்கு மேல் சோதனைகள் நடத்தப்பட்டுவருகிறது.

Also Read: “முஸ்லிம் விரோதப் போக்குகளுக்கு ஊக்கமளிக்கிறார்”: அங்கி தாஸ்க்கு எதிராக Facebook ஊழியர்கள் போர்க்கொடி!